பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

லூலு என்பவனால் குத்தப்பட்டார். கத்திக் குத்துப்பட்ட உமர்(ரலி) அவர் களோ தொழுகையைத் தொடர்ந்து நடத்தும்படி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபைக் கேட்டுக்கொண்டார். அவ ரும் அவ்வாறே செய்தார். தாம் குற்று யிராய்க் கிடந்தபோது கூட இறை வணக்கம் தடையின்றி நடக்கச் செய்த செயலானது இஸ்லாமிய இறை நியதி களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்ப தில் அவர் காட்டிய உறுதிக்கு இன்றும் சான்றாக விளங்கி வருகிறது.

இவர் கத்திக் குத்துப்பட்ட நான்கு நாட்களுக்குப்பின் காலமானார். இவ ரது உடல் முதல் கலீஃபாவான அபூபக்ர் * f", co ளி -- S o -- of (ரலி) அவர்களின் அடக்கவிடத்திற்கு அருகிலேயே அடக்கப்பட்டது.

இஸ்லாம் விரைந்து பரவவும் அழுத்த மாக நிலைபெறவும் பெருங் காரண மாய் அமைந்தவர் உமர் (ரலி) என்று கூறலாம்.

காங்கிரஸ் முதன் முதலில் பல்வேறு மாகாணங்களில் 1937ஆம் ஆண்டு ஆட் சிப் பொறுப்பேற்றபோது, அவ்வாட்சி உமர் (ரலி) அவர்களின் ஆட்சிபோல வே அமைய வேண்டும் என்று தம் ஆசையை காந்திஜி வெளிப்படுத்தியிருந்

தார்.

உமர் கய்யாம்: மாபெரும் பாரசீக மொழிக் கவிஞராக விளங்கியவர் உமர் கய்யாம். இவரது இயற்பெயர் கியா ஸ்ாத்தின் அபுல் பத்ஹ் உமர் என்பதா கும். கய்யாம் என்பது குடும்பப் பெய ராகும். அக்காலத்தில் கூடாரம் செய் வோர் இப்பெயரல் அழைக்கப்பட்ட னர். இவரது குடும்பத்தவர் இத்தொழி லைச் செய்து வந்ததால், இது இவரது குடும்பப் பெயராகவும் அமைந்து விட்டது.

உமர் கய்யாம்

உமர் கய்யாமின் பிறந்த ஊரும் தேதி யும் சரியாகத் தெரியவில்லை. இவரது அடக்கவிடம் நிஷாப்பூர் எனுமிடத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பிறந்த மண்ணிலேயே அடக்கம் செய்வது அக் கால வழக்கமாதலால், இவர் பிறந்த ஊரும் நிஷாப்பூராகவே இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இவர் தந்தை இப்ராஹீம் பெரும் செல்வந்தராக விளங்கியவர். உமர் கய் யாமுக்கு மிகச் சிறந்த கல்வி அளித் தார். இறைஞானச் சிந்தனை மிகுந்த உமர் கய்யாம், கணித மேதையாக விளங்கினார். விண்ணியல் பற்றிய இவ ரது அறிவு பலரையும் வியக்க வைத் தது. இத்துறைகளில் இவர் மிகச் சிறந்த திறமையாளராக விளங்கியதால் சுல் தான் மாலிக்ஷா இவரைப் பெரிதும் ஆதரித்துப் போற்றினார். அவர் வேண்டுகோளுக்கி ணங்க இவர் சந்திர, சூரிய இயக்கங்களின் அடிப்படையில் ஜலாலி பஞ்சாங்கத்தை உருவாக்கினார். இது கிரிகோரியன் பஞ்சாங்கத்தைவிட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவர் வானியல் விற்பன்னராக விளங் கியதால் சோதிடத்துறையிலும் வல்ல வராக இருந்தார். இவரது விண்ணியல் திறமையை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) பெரிதும் பாராட்டியுள்ளார். விண்ணி யல் பற்றி இவர் எழுதிய நூல்கள் இன் றும் இஸ்தம்புல் நூலகத்தில் பாதுகாக் கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று கணக்கியலிலும் இவர் பெரும் புலமையாளராகத் திகழ்ந்தார். இவர் அல்ஜிப்ரா கணிதம் பற்றி எழு திய நூல்கள் இத்துறை கணித வளர்ச் சிக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன. இவர் பெளதிகம் எனக் கூறப்படும் 'இயற்பியல் அறிவியல் துறையிலும் மிகச் சிறந்த விற்பன்னராகத் திகழ்ந்

தார்.