பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ()

தெரியாததால், தம் பற்கள் அனைத் தையுமே அகற்றிவிட்டார். இதை யறிந்த பெருமானார் அவர்கள் தம் மீது கொண்ட அன்பு கண்டு பேருவகை அடைந்தார். அவரை மானசீகமாக நன்கு அறிந்திருந்த நாயகத் திருமேனி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களி டமும், அலி (ரலி) அவர்களிடமும் உவைஸால் கரணியின் அங்க அடையா ளங்களைக் கூறினார். அவரைக் காண நேரிட்டால் அவருக்குத் தம் ஸ்லாம் கூறுமாறு பணித்தார். அவர் மீது போர்த்துவதற்கென தம் மேலங்கி ஒன்றையும் இவர்களிடம் பெருமானார் அவர்கள் தந்தார்.

பெருமானார் காலத்

ஆயினும் திலோ அவருக்குப் பின்னர் கலிஃபா வாக இருந்த அபூபக்ர் (ரலி) காலத் திலோ, உவைஸால் கரணி கண்டறியப் படவில்லை, உமர் (ரலி) கலிஃபாவாக இருந்தபோதுதான். ஹஜ் செய்ய வந்த ஒருவர் மூலம் உவைஸ்-ல் கரணீஇருக்கு மிடம் தெரியவந்தது. உடனே உமர் (ரலி) அவர்களும் அலி (ரலி) அவர் களும் அவரைக் காணப் புறப்பட்டனர். அவர்களுடன் பெருமானார் (ஸல்) அவர்கள் தந்திருந்த போர்வையை யும் கொண்டு சென்றனர்.

உவைஸ்-ல் கரணி (ரஹ்) அவர்கள் இருக்குமிடத்தை இவர்கள் இருவரும் நெருங்கியபோது, அவர் தொழுது கொண்டிருந்தார். பெருமானார் கூறிய படியே அவர் அங்க அடையாளங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். தொழுது முடித்தி உவைஸ்-ல் கரணி ( тар) அவர்கட்குப் பெருமானாரின் வலாம் கூறி, அண்ணலார் தந்திருந்த அவர்தம் போர்வையைப் போர்த்தி . உம்மத்துகளுக்காக இறைவனிடம் துஆச் செய்யுமாறு பெருமானார் விடுத்திருந்த வேண்டுகோளையும் கூறி

எகிப்து

னர். பெருமகிழ்வடைந்த உவைஸ்-ல் கரணி (ரலி) அவர்களும் அவ்வாறே இறைவனிடம் துஆ கேட்டு மன்றாடி

னர்.

சிலகாலம் இறைப்பித்தராக வாழ்ந்த கரணி (ரலி), அலீ (ரலி) அவர்கட்கும் மு. ஆ. வி யா வுக் கு ம் இடையே நடந்த விஃப்ஃபீன் போரில் ஈடுபட்டு உயிரிழந்தார்.

உவைஸ்ால்

எகிப்து, இஸ்லாமிய வரலாற்றிலும் மனித குல நாகரிக வரலாற்றிலும் சிறப்பிடம் பெற்று விளங்குவது எகிப்து நாடு. இன்று எகிப்து ஒரு குடியரசு நாடாக விளங்குகிறது. ஆப்பிரிக்காக் கண்டத்தின் வடகிழக்குக் கோடியில் இந்நாடு அமைந்து உள்ளது. லிபியாவும் செங்கடலும் மத்திய தரைக்கடலும் சூடானும் இதன் எல்லைகளாக அமைத் துள்ளன. இந்நாட்டின் மொத்தப் பரப் பளவு 10,01,448 ச.கி.மீ. ஆகும். மக் கள் தொகை சுமார் நாலரைக் கோடி

ஆகும்.

உலகின் மிக நீளமான நைல்நதி இந் நாட்டின் வழியாகத்தான் ஒடுகிறது. நைல் ஆறு பாயும் பகுதிகள் வளமிகுந்த உள்ளது. மற்றையப் பகுதிகள் வறண்ட பாலைவனப் பகுதியாகும். நைல் நதியின் வண்டல் படிவதால் வேளாண்மைத் தொழில் செழிப்பாக நடைபெற்று வருகிறது. இதனால்தான் croog. The gift of the Nile £a 56 யின் அன்பளிப்பு எனப்படுகிறது. இங்கு விளையும் பருத்திக்கு நல்ல கிராக்கி உண்டு. அது பெரும்பாலும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறது.

மத்திய தரைக்கடலுக்கும் செங்கட லுக்கும் இடையே சூயஸ் கால்வாய் வெட்டப் பட்டுள்ளது. இக்கால்வா

யால் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்

தாக