பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரபு எமிரேட்ஸ் ஆகும். அவை அபு தாபி (அபூலபீ), துபாய், ஷார்ஜா, உம் முல ராஸால கைமா, ஃபுஜைரா, அஜ்மான் ஆகிய ஆட்சிப் பகுதிகளாகும். இவற்றுள் மிகப்பெரி யது அபுதாபி, மிகச் சிறியது அஜ்மான். இந்த அரபுச் சிற்றரசுகள் ஆசியாவின் தென்மேற்கே வளைகுடாப் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. எமி ரேட் சின் மொத்தப் பரப்பளவு 83,600 ச. கி. மீ. ஆகும். தொகை

சுமார் 80 இலட்சமாகும்.

கைவன்,

மக்கள்

ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த குடிமக்கள் அனைவரும் முஸ்லிம்களே பணி நிமித்தமாக இந்நாடு

யாவர். களில் ஈரானியர், பாகிஸ்தானியர், வங்காள தேசத்தவர், இந்தியர்,

இலங்கையர் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் தங்கிச் செல்வோரே தவிர குடியுரிமை பெற்று வாழ்வோர் அல்லர்.

அபுதாபியிலும் துபாயிலும் அதிக

அளவில் பெட்ரோல் கிடைக்கிறது. இந்நாடுகளின் செல்வ வளத்துக்கு

அதுவே ஆதாரமாகவும் அமைந்துள் ளது. சுங்கவரி இல்லாத நாடுகளாத லால் மிகப்பெரிய சர்வதேசச் சந்தை யாகவும் எமிரேட்ஸ் விளங்குகிறது.

இங்கு கோடைகாலத்தில் வெயில் கடுமையாக இருக்கும். குளிர்காலத்தில் குளிர் மிதமாக இருக்கும்.

ஐதுருஸ் நயினார்ப் புலவர். இஸ்லா மியத் தமிழ்ப்புலவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ஐதுருஸ் நயினார்ப் புலவர். இவர் திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டத்தில் உள்ள காலங்குடியிருப்பு எனும் ஊரில் பிறந்தவராவார். இவரது தந்தையார் மீரா நயினார்ப் புலவர்

ஆவார்.

இவரைப் போன்றே இவர் முன் னோர்கள் ப ல ரு ம் இஸ்லாமியத்

ஐயூப் (அலை)

தமிழ்ப் புலவர்களாகவே வாழ்ந்துள்ள னர். ஐதுரூஸ் நயினார்ப் புலவர் சிறு வயதில் புலவர் நாயகம் சேகனாப் புல வரிடம் தமிழ் கற்றவர். கவிபாடுவதில் வல்லமை பெற்றவர்.

இவர் இயற்றிய காவியம் 'நவமணி மாலை என்பதாகும். இது முஹிய்யுத் தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாடல்களாக விரித்துரைப்பதாகும். இது 35 படலங்களால் ஆனது. 2335 விருத்தப் பாக்களைக்கொண்டது. இந் நூல் இவர் காலத்திற்குப் பின்னரே அச்சாகி வெளிவந்தது.

இவர் வேறு பல பாடல்களையும் இயற்றியுள்ளார். அவை அனைத்தும் 'ஐதுரூஸ் நயினார்ப் புலவர் பாடல் திரட்டு என்ற பெயரில் நூலாக வெளி வந்துள்ளது.

இவர் புலவராக மட்டுமின்றி மெஞ் ஞானச் செல்வராகவும் வாழ்ந்தவர். அலவிய்யா தரீக்காவின் கலிஃபாவாக வும் விளங்கினார். இவர் பெயரில் இன் றளவும் புலவர் வரி வசூலிக்கப்பட்டு, இவர் வாரிசுதாரரிடம் அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஐயூப் (அலை) அல்லாஹ் தன் திரு மறையான திருக்குர்ஆனில் குறிப்பிட் டுள்ள நபிமார்களில் ஒருவர் ஐயூப் (அலை) அவர்கள். இவர் இஸ்ஹாக் (அலை) வழி வந்தவராகக் கருதப்படு கிறார்.

இவர் செல்வ வளம் படைத்தவராக இருந்தும் இபுலிசின் ஏவலால் வறிய நிலையை அடைந்தவர். வறுமையோடு கொடிய நோயும் இவர்களைப் பீடித் தது. எந்த நிலையிலும் இடையறா இறைவணக்க நெறியினின்றும் சிறிதும் வழுவாது வாழ்ந்தவர். இ வ. ர து துணைவியார் ரஹீமா நாச்சியார் துன்