பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲇

சாலை'ச் செயலாளராகப் பணியாற்றி னார். அதே சமயத்தில் பல்வேறு பதிப் பகங்களோடு தொடர்புகொண்டு, இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிப்பவராகவும் பணியாற்றினார். காலப்போக்கில் மக்களால் மறக்கப்பட் டிருந்த பல பெரிய முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் படைப்புகளை மீண்டும் முறையாகப் பதிப்பித்து வெளிப்படுத்தி னார். இவ்வாறு அச்சேற்றிப் பதிப் பித்த இஸ்லாமியத் தமிழ் நூல்கள் சுமார் அறுபது ஆகும். இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வர லாற்றை முறையாகத் தொகுக்கத் தொடங்கினார். அப்பணி நிறை வேறும் முன் இறப்பெய்தினார். இவர் சென்னையிலேயே நல்லடக்கம் செய் யப்பட்டார்.

கதீப். இச்சொல்லுக்குச் சொற் பொழிவாளர்' என்பது பொருளாகும். வெள்ளிக்கிழமை தோறும் பள்ளியில் 'குத்பா பேருரை நிகழ்த்துபவர் கதீப் ஆவார். இவர் வெள்ளுடை அணிந்து, கையில் தடி ஏந்தி மின்பரில் நின்று குத்பா உரை ஆற்றுவார்.

இஸ்லாத்தின் முதல் கதீப் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆவர். பெருமானார் அவர்கள் மின்யரில் நின்று முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங் குவது வழக்கம். பெருமானாரைப் பின் பற்றி அடுத்து கலீஃபாக்களாக இருந்த நால்வரும் கதீப்களாக விளங்கினர். நீண்டகாலம் வரை கதீப்களே இமா மாகவும் இருந்து தொழுகை நடத்தி னர். ஆனால், ஹாரூனுர் ரஷீது காலத் தின் கதீப்கள் தனியே அமர்த்தப்பட்ட னர். பின்னர் இவர்களே கலீஃபாவின் பிரதிநிதிகளான கதீப்களாவும் இமா மாகவும் அமைந்து தொழுகை நடத்தி னர். இம்முறையே இன்று வரை எங் கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

கந்தூரி

கதீஜா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி என்னும் சிறப்புக்கு உரியவர். இவருக்கு முன்பே இருமுறை திருமணம் ஆனபோதிலும் விதவை நிலை பெற்றவராக இருந் தார். பெரும் செல்வச் சீமாட்டியாக வணிகம் செய்து வந்தார். தம் வணிக நிறுவனத்தில் பணிசெய்து வந்த அண்ணலாரின் ந ல் லி ய ல் பு க ைள அறிந்து, வறியவரான பெருமானாரை மணமுடிக்க விரும்பினர். அதற்குப் பெருமானாரும் இசையவே, எளிய முறையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது கதீஜா (ரலி) அவர்கட்கு வயது நாற்பது. பெருமானார் (ஸல்) அவர்கட்கு வயது இருபத்தியாறு. அவர்கட்கு இரு ஆண் மக்களும், பாத்திமா முதலாக மூன்று பெண் மக்களும் பிறந்தனர். ஆண் பிள்ளைகள் இருவரும் இளமையிலேயே இறந்துவிட்டனர்.

ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) மூலம் வஹீயைப் பெருமானார் பெற் றார். இச்செய்தியை முதலில் கேட்டு, பெருமானார் சொல்லில் நம்பிக்கை கொண்டு, அண்ணலாரை இறைத் துரத ராக ஏற்று ஈமான் கொண்டார். குறைஷிகளிடம் பெருமானார் பெருந் து ன் ப ம் அடைந்தபோதெல்லாம், ஆறுதலாக இருந்தவர் அன்னை கதீஜா (ரலி) அவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து தம் 64வது வயதில் நோய்வாய்ப்பட்டு காலமானார். இவரது அடக்கத்தலம் மக்காவில் உள்ளது.

கந்தூரி: மறைந்த இஸ்லாமிய இறை நேசச் செல்வர்களின் நினைவாக நடை பெறும் விருந்துக்குக் கந்தூரி. என்று பெயர். இது பாரசீகச் சொல். இதற்