பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

ஹாவைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். மேலும் மகத்துவமும் உயர்வுமுள்ள அல்லாஹ் வின் துணையில்லாது பாவத்திலிருந்து மீளவோ நன்மை செய்யவோ யாருக் குமே ஆற்றல் இல்லை என்பதாகும். நான்காவது கலிமா கலிமா தெள ஹீது' என்று அழைக்கப்படும். அதன் வாசகம் வருமாறு:

“லா இலாஹ இல்லல்லாஹ வவிற த ஹா லாஷரீக்க லஹா லஹால் முல்கு வலஹால் ஹம்து யு ஹயீ வயுமீது பியதிஹில் கைரு, வஹவ அலாகுல்லி ஷைஇன் கதீர்'

என்பதாகும்.

தமிழில் இதற்கான பொருள் வரு ւնո ն):

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை. அவ னுக்கே அரசுரிமை உள்ளது. அனைத் துப் புகழும் அவனுக்கே அவனே வாழச் செய்கிறான். இறக்கச் செய்கிறான். அனைத்து நன்மைகளும் அவன் வசமே உள்ளன.அனைத்தின் மீதும் அவனுக்கே அதிகாரம்' என்பதாகும்.

ஐந்தாவது கலிமா கலிமா ரத்துல் குப்ர்' என்பதாகும். அதன் வாசகம் பின்வறுமாறு:

அல்லாஹாம்மா இன்னி அஊது பிக மின்அன் உஷ்ரிக பி.க ஷைஅன் வ அனா அஃலமு வஅஸ்தஃபிருக லிமாலா அஃலமு இன்னக்க அன்த அல்லாமுல் குயூப் துப்து அன்ஹவதபர்ரஃது அன்குல்லி தீனின் விவாதீனில் இஸ்லாம் வஅஸ்லம்து வ. ஆமன்து வ ஆகூலு லாஇலாஹ இல்லல்லாஹா முஹம்மதுர் ரஸல் லுல்லாஹி என்பதாகும். இதன் பொருள் வருமாறு:

இறைவனே உன்னோடு எதனையும் இணை வைப்பதைவிட்டு உன்னிடம்

கலீஃபா

பாதுகாப்புத் தேடுகிறேன். இன்னும் அறிந்து செய்த, அறியாமற் செய்த பாவங்களை விட்டு உன்னிடம் மன்னிப் புத் தேடுகிறேன். உறுதியாக, மறை வானவை அனைத்தையும் நீ அறிவாய். அவற்றிலிருந்து நான் மீண்டுவிட்டேன். தினுல் இஸ்லாத்தைத் தவிர பிற மார்க் கங்கள் அனைத்தையும் விட்டு நீங்கி விட்டேன். மேலும் நான் முஸ்லிமாகி வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதர் ஆவார் என்று கூறுகிறேன்' என்பதாகும்.

இக்கலிமா இறைவனால் அருளப்பட் டது. முதல் மனிதரும், நபியுமான ஆதம் (அலை) அவர்களைப் படைப்ப தற்கும் முன்பே அர்வில் எழுதப்பட்ட வாசகங்கள் ஆகும். ஆதம் (அலை) முதன்முறையாக உயிர் பெற்றெழுந்த போது அவர் கண்களில் பட்டது இக் கலிமாக்களே ஆகும். ஆதம் (அலை) முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈறாக வந்த நபிமார்கள் அனைவருக் குமே இக் கலிமா வஹி மூலம் இறைவ னால் அருளப்பட்டுள்ளது. நபிமார் களையும் வேதங்களையும் இக்கலிமா விற்காகவே அல்லாஹ் அனுப்பியுள் ளான். அனைத்து மறைகளின் அடிப் படை இக் கலிமாக்களே யாகும்.

கலீஃபா: இச்சொல்லுக்குப் பிரதிநிதி' என்பது பொருளாகும். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைத் தன் பிரதி நிதியாகப் படைத் தான். அதன்பின் மக்களுக்கு வழிகாட்ட வந்த நபிமார் கள் இறைவனின் பிரதிநிதிகளாக தூது வர்களாக மக்களுக்கு இறை மார்க் கத்தை புகட்டினார்கள். இறுதி நபி யோடு தூதுத்துவம் முழுமையடைந்து விட்டது.

அண்ணல் (ஸல்) அவர்கள் மறைவுக் குப் பின், அவர்களால் நிலைநாட்டப்