பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசிம் புலவர்

& & & *. " ..." * தியான வாழ்வு வாழ்ந்தார். பின், அங் குள்ள ஜாவியாவில் மாணவர்கட்குப் பாடம் சொல்லி வரலானார்.

பின் அங்கிருந்து பைத்துல் முகத் தலை அடைந்தார். பின், இப்ராஹீம் (அலை) அவர்களின் அடக்கவிடத்தைத் தரிசித்தார். பின் ஈஸா (அலை) அவர் களின் பிறப்பிடம் சென்றார். பின்னர், ஹஜ் செய்ய மக்கா சென்றார். மதீனா சென்று அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் தரிசித்

தார்.

இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர், மீண்டும் பக்தாது சென்றார். அப்போது அங்கு இஸ்லா மிய நெறிக்கு எதிரான போக்குகள் தலைதுாக்கியிருந்தன. அவற்றைப் பேச் சாலும் எழுத்தாலும் களைய மனவுறுதி மிக்க மார்க்க மேதை ஒருவர் தேவைப் பட்டார். கஸ்ஸாலி (ரஹ்) வருகையை அறிந்து ஆட்சியினர் அவரையே மீண் டும் நிலாமிய்யாக் கல்லூரித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டினர். நீண்ட ஆலோசனைக்குப் பின் இப்பணியை ஏற் றுக் கொண்டார். ஆனால், விரைவி லேயே அப்பதவியையும் விட்டுவிட்டு சொந்த ஊரானது.ாஸ் வந்துசேர்ந்தார். அங்கு ஒரு தவச் சாலையை உருவாக்கி, அங்கு வரும் மாணவர்கட்கு மெய்ஞ்ஞா னக் கல்வியைப் போதித்துவந்தார். அப் போது ஹதீதுக் கலையை மேலும் மே லும் கற்று அதில் மேதையானார்.

கஸ்ஸாலி (ரஹ்) ஹிஜ்ரி 505 ஆண்டு (1111) ஜமாதுல் ஆகிர் பிறை 14 அன்று தம் இறுதி நெருங்கிவிட்டதை உணர்ந்தார். தொழுதபின் தம் கபன் துணியை முத்தமிட்டுப் படுத்தார். சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது. அவர் பிறந்த ஊரான தாளிலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

7

3

இஸ்லாமிய மார்க்க மேதைகளிலே யே மிக அதிகமான நூல்களை எழுதிய வர் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களே ஆவார். மொத்தம் 132 நூல்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் சில இவரால் இவரது சொற்பொழிவை பிறர் எழுதி அங்கீ கரித்தவையாகும்.

எழுதப்படாமல்,

இவர் எழுதிய நூல்களில் இவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தது, 'இஹ் யாவு உலூமித்தீன்' என்பதாகும்.

இவரது பேச்சும் எழுத்தும் மக்களிடை யே மார்க்க ஞானம் பெருக வழிகோலி யது. அத்துடன் மாபெரும் இஸ்லாமிய மறுமலர்ச்சிஏற்படவும் வழியமைத்தன. இவருடைய நூற்கள் பல்வேறு மொழி களில் பெயர்க்கப்பட்டன. குழந்தை கள் பற்றிய அய்யுஹல் வலது நூலை ஆங்கிலத்தில் பெயர்த்து யுனெஸ்கோ' வெளியிட்டுள்ளது.

காசிம் புலவர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களில் இசைத் தமிழ் இலக்கியம் படைத்த பெரும்புலவர் காசிம் புலவர். இவர் கடற்கரைப்பட்டினமான காயல் பட்டினத்தில் பிறந்தவர். இவர் முன் னோர்கள் எகிப்து நாட்டிலுள்ள அல் காஹிரா (கெய்ரோ) நகரைச் சேர்ந்த வர்கள்.

காசிம்புலவர் இளமையிலேயே இஸ் லாமிய மார்க்க ஞானம் மிக்கவராக விளங்கினார். திருவடிக் கவிராயர் என் பாரிடம் தமிழ் கற்றுப் பெரும் புலமை பெற்றார். இசைஞானம் மிகுந்தவராக வும் இருந்தார்.

ஒரு சமயம் இவர் ஆசிரியர் திருவடிக் கவிராயர் அருணகிரியாரின் திருப் புகழ்' நூலை பெரிதும் பாராட்டினார். இதற்கு இணையான வேறொரு திருப் புகழைப் பாட இனி எவராலும் இய