பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

லாது எனக் கூறினார். இதைக்கேட்ட காசிம் புலவர் என்னால் பாடமுடியும்' என்றார். அவ்வாறாயின் பாடிக் காட்டு' எனப் பணித்தார் ஆசிரியர் திருவடிக் கவிராயர்.

ஆசிரியரிடம் கூறியவண்ணம் பாடத்

தொடங்கினார். ஆனால், எப்படித் தொடங்குவது எனத் தெரியாமல் விழித்தார். மனக்கவலையுடன் உறங்

கச் சென்றார். கனவில் பெருமானார் தோன்றி பகரும் எனச் சீர் எடுத்துக் கொடுத்தார். அச்சீரையே முதலாகக் கொண்டு பாடத் தொடங்கினார்.

இவரும் விரைவிலேயே 141 பாடல் களைப் பாடி நூலை நிறைவு செய் தார். காசிம் புலவர் திருப்புகழ்' நூலைப் படித்த ஆசிரியர் திருவடிக் கவிராயர், இவரது தமிழ் அறிவையும் செய்யுள் இயற்றும் திறனையும் இசை ஞானத்தையும் பெரிதும் போற்றினார். இவருக்கு வரகவி எனும் பட்டத்தை அளித்துப் பாராட்டினார்,

இவர் ஹிஜ்ரி 1177 துல்கஃதா பிறை 12 வெள்ளி இரவன்று காலமானார். இவரது உடல் காயல்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவர் ஆண் மக்கள் இருவரும் இவரை போலவே திறம்பட்ட இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்களாக விளங்கினர்.

காயல்பட்டினம். இது கடற்கரையை ஒட்டியுள்ள ஊராகும். இவ்வூரில் முஸ் லிம் பெருமக்கள் பெருமளவில் வாழ் கின்றனர். இவ்வூரிலிருந்து ஏழு கி.மீ. துரத்தில் வங்காள விரிகுடாக் கடலும் அதன் கரையில் திருச்செந்தூரும் அமைந்துள்ளன.

காயல்' என்ற சொல்லுக்கு உப்பங் கழி’ என்று பொருள். கடல் ஒடையாக அமைந்துள்ள இக்கழிமுகப் பகுதியில் மக்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தனர்.

காயல்பட்டினம்

நாளடைவில் மக்கள் தொகை பெரு கவே அது கடற்கரைப் பட்டினமாக வளர்ந்தது. அதுவே இன்றைய காயல் பட்டினம்,

எகிப்து நாட்டின் முக்கிய நகரான காஹிரா (கெய்ரோ)விலிருந்து குடும் பம் குடும்பமாக 224 பேர் கப்பலேறி இக்கீழக் கடற்கரைப் பகுதியை வந்த டைந்தனர். தாங்கள் இறங்கிய கடற் கரைப் பகுதியிலேயே தங்கி வாழலாயி னர். அப்போது அப்பகுதியை ஆண்டு வந்த பாண்டிய மன்னர் இவர்கட்கு வேண்டிய உதவிகளை வழங்கினார். இவ்வாறு இவர்கள் வாழ்ந்துவந்த பகுதி அடிக்கடி இயற்கையின் சீற்றத் திற்கு ஆளாகியது. எனவே, இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் வீடுகளையும் பள்ளிகளையும் விட்டு விட்டு அருகி லுள்ள வேறோர் இடத்திற்குக் குடி பெயர்ந்து சென்று வாழலாயினர். அதுவே இன்றைய முந்தைய ஊர் பழைய காயல்' என்று இன்று அழைக்கப்படுகிறது.

காயல்பட்டினம்.

இவ்வூரில் இறைநேசச் செல்வர் பல ரும், மார்க்க ஞான மேதைகளும் தோன்றியுள்ளனர். மாபெரும் மார்க்க மேதையான சதக்கத்துல்லா அப்பா இவ்வூரில் பிறந்தவராவார். இவ்வூரில் தர்காக்கள் பல உள்ளன. தெருதோ றும் பள்ளிவாயில்கள் உள்ளன. மொத் தம் 30-க்கு மேல் உள்ளன. பெண்கள் தொழுகைக்கெனத் தனிப் பள்ளி வாசல்கள் உள்ளன. இவ்வூரில் மார்க்க அறிவு புகட்டும் மதரஸாக்கள் பல உள்ளன.

அரபுத் தமிழ் வளர்ச்சிக்கு இவ்வூர் ஆலிம்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். தமிழ் இலக்கியப் புலமையாளர்களும் ஆர்வலர்களும் இவ்வூரில் தோன்றி புகழ் சேர்த்துள்ளார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் புலவர் நாயகம்