பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கஃபா இருக்கும் திசையையே கிப்லா" வாகக் கொண்டு தொழுகை நடத்து கின்றனர். கஃபத்துல்லாஹ்வில் தொழு வோர்க்குத் திசை இல்லை. அங்கு எப் பக்கம் இருந்தும் தொழலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கட்கு முன்பு வந்த இறை தூதர்களான முஸ்ா (அலை) அவர்களும், இப்ராஹீம் (அலை) அவர்களும் கஃபாவின் திசை யையே கிப்லாவாகக் கொண்டு இறை வணக்கம் புரிந்து வந்தனர்,

அண்ணலார் மதீனா வந்த புதிதில் ஜெருசலத்திலுள்ள பைத்துல் முகத் தளை கிப்லாவாகக் கொண்டு தொழு தார். பதினேழு மாதங்களுக்குப் பின் னர் வஹீயின் மூலம் கஃபாவையே கிப்லாவாகக் கொண்டு தொழலானார். அம்முறையே இன்றுவரை பின்பற்றப் பட்டு வருகிறது.

பள்ளிவாசல்களில் கிப்லா திக்கைக்

குறிக்கும் வகையில் மிஹ்ராப் எனும் மாடக்குழி அமைக்கப்படுகிறது. நாம் தொழும்போது நமது நெஞ்சும் முக மும் கிப்லாவை நோக்கியே இருக்க வேண்டும். கால் பெருவிரல்களும் கிப்லாவை நோக்கியே இருக்க வேண்டு வது அவசியமாகும்.

மலேசியா போன்ற முஸ்லிம் நாடு களில் உள்ள தங்கும் விடுதிகளில் கிப் லாவைக் குறிக்கும் அடையாளக் குறி கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியூர் செல்பவர்கள் கிப்லா திசை தெரியாவிடில், மற்றவர்களைக் கேட்டு நன்கு தெரிந்தபின்பே தொழத் தொடங்கவேண்டும். நம்மால் நன்கு தெளிவாக அனுமானிக்க முடியும் என் றால் அவ்வாறு அனுமானிக்கும் திக்கை யே கிப்லாவாகக் கொண்டு தொழ லாம்.

இஸ்லா

கிப்லாவின் திசையில் கால் நீட்டக் கூடாது. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாது. இறந்தவர்களின் முகத்தை கிப்லாவை நோக்கி வைக்க வேண்டும். குர்பானி கொடுக்கப்படும் பி ரா னி க ளி ன் முகத்தை கிப்லாவை நோக்கி வைத்தே அறுக்க வேண்டும்.

கிரஅத்: கிர அத் எனும் சொல் லுக்கு ஒதுதல்' என்பது பொருளாகும்.

அதிலும் குறிப்பாக குர்ஆன் ஒது வதையே இச்சொல் குறிக்கிறது.

திருமறையை ஏழு வகைகளில் நிறுத்தக குறி, உச்சரிப்புக்களுக்கேற்ப ஒதலாம். இவ்வாறு கிர அத் ஒதுபவர்கள் காரீ: கள் என அழைக்கப்படுவர்.

தொழுகையின்போது ஒதப்படும் கிர அத் தைக் கேட்பது கடமையா கும் (ஃபர்ள்). பிறர் ஒதக் கேட்பது முஸ்த ஹப் ஆகும்.

கிரஅத் ஒதுவதற்குக் குரல் வளம் மிக அவசியமாகும். கிர அத் கலை யைக் கற்பிக்கும் நூல்கள் பல உள்ளன. கிர அத் கேசட்டுகள் இன்று உலகெங் கும் கிடைக்கின்றன. மலேசியா, இந் தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிர அத் போட்டிகள் உலக அளவில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

கிஸ்ஸா: இது ஒரு அரபு மொழிச் சொல்லாகும். இதற்குக் கதை கேட் டல்' என்பது பொருள். இச்சொல் கலஸ்' எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததாகும். இச்சொல்லுக்கு செய்தி" என்ற மற்றொரு பொருளும் உண்டு.

முற்காலத்தில் படைவீரர்களுக்கு மேலும் வீர உணர்வை ஊட்ட, மறைந்த மாவீரர்களின் வீரவாழ்வை விளக்கும் பாடல்களை உணர்ச்சி பொங்கப் பாடிக்காட்டுவர். இப் பாடல்களில் வீர உணர்வைப் பொங்