பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. தொலைக்காட்சி இந்தச் சிறிய புத்தகத்தில் பல செய்திகளை அறிந்துகொண்டோம். இவை யாவும் தொலைக் காட்சியைப்பற்றி அறிய உதவும் செய்திகளே. சில செய்திகள் தொலைக்காட்சியைப்பற்றி அறிவ தற்கு அடிப்படையானவை; சில செய்திகள் தொலைக்காட்சியைப்பற்றி நேரடியாக விளக்கு பவை. எனினும், நம் மனம் இன்னும் குழம்பிய நிலையில் இருக்கலாம்; சில சமயம் தயிர் கடையும் பொழுது வெண்ணெய் திரளாமல் குழம்பிய நிலையைப் பார்த்திருக்கின்ருேமல்லவா? நம் மனம் அங்கிலேயில் இருக்கக்கூடும். எனவே, இதுகாறும் விளக்கியவற்றைத் தொகுத்துக் கூறுவோம். இது நமது மனத்திற்கு ஒருவிதத் தெளிவை அளிக்கும். முதல் நிலை: நாம் ஒளிப்படம் எடுத்துக்கொள் ஞம்பொழுது நாம் காமிராவின் முன்னர் இருக்கின்ருேமல்லவா? அது போலவே தொலைக்காட்சிக் காமிராவின் முன்னர் நடிகர் அல்லது இசை நிகழ்ச்சியில் பங்குபெறும் கலைஞர் காணப்பெறுகின்ருர். அல்லது கிலேய நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிக் காமிராவின் ப்ார்வைக்கு உட்படுத்தப்பெறுகின்றன.