பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு கலைச்சொல் விளக்கம் sistæin (Uiniverse) : atsar வெளியில் கோள்கள், விண்மீன்கள் முதலிய அனைத்தும் அடங்கிய பகுதி. அதிர்வு-எண் (Frequency): ஒரு விடிையில் அலை எத்தனை தடவைகள் அதிர்கின்றனவோ அத்தனை தடவை களே அதிர்வு - எண் என்பது. - அங்கவடி எலும்பு (Stirrup): இடைச் செவியிலுள்ள மூன்று சிற்றெலும்புகளில் இஃது ஒன்று; இது வடிவில்ை இப்பெயர் பெற்றது. அஞ்சல் நிலையங்கள் (Relay stations) : தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை மிகத் தொலைவான இடங்கட்கு அனுப்புவதற் காகக் குன்றுகள் போன்ற உயர் இடங்களில் அமைக்கப் பெறும் நிலையங்களாகும். அயனப் பாதை (Orbit) . வான நூலில் சூரியனைச் சுற்றிக் கோள்கள் செல்லும் வழி இங்ங்னம் குறிக்கப்பெறு வது அணுவியலில் உட்கருவினைச் சுற்றி மின்னணுக்கள் செல்லும் பாதையும் இச்சொல்லால் குறிக்கப்பெறும். அலைக் கொள்கை (Wave theory): ஒலி அலை அலையாகச் செல்லுகின்றது என்பதை விளக்கும் பெளதிக இயற் கொள்கை. இக்கொள்கையினைத் தோற்றுவித்தவர் கிறிஸ்டியன் ஹைகன்ஸ் என்பார். - * † (Mirrors): ஒளிக்கதிர்களைக் குவியச் செய்வ தற்கும் விரியச் செய்வதற்கும் முறையே பயன்படுத்தப்பெறும் பல்வேறு வகைக் கண்ணுடி வகைகள்.