பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இளைஞர் தொலைக்காட்சி ஒலிவாங்கி (Microphone) : ஒலிவாற்றலை மின்னுற்ற லாக மாற்றக்கூடிய ஒர் அமைப்பு : சொற்பொழிவின் பொழுது பொழிவாளரின் முன்ல்ைவைக்கப்பெறுவது. ஒளி அலைகள் (Light waves): ஒளியும் அலைமூலமாகவே பரவுகின்றது. ஆனல் இதன் ஊடகம் வானி. இது விடிை யொன்றுக்கு 297600 கிலோ மீட்டர் வீதம் செல்லுகின்றது. ஒலிச் சைகைச்செய்தி (Audio signal): வானெலி நிலை யத்தினின்றும் தொலைக்காட்சி நிலையத்தினின்றும் ஆண் டென்ன என்னும் வான் கம்பியின்மூலம் நாலா புறங்களிலும் பரவிச் செல்லும் ஒலித்துடிப்புக்களாகும் இவை. இவை நம் பெட்டியில் ஒலியாகின்றன. ஒளிச் சைகைச்செய்தி (Video signal) : தொலைக் காட்சி நிலையத்தினின்றும் உணர் கொம்பு எனப்படும் வான்கம்பி வழியாக நாலா புறங்களிலும் பரவிச் செல்லும் ஒளித்துடிப்புக் களாகும் இவை. இவையே நம் பெட்டியில் படமாக மாறு கின்றன. şañ-istsir*sdú (Photo-electric cell) : @*gii psfissou மின்சாரமாக மாற்றும் ஓர் அற்புத அமைப்பு. இது பேசும் படக்காட்சியிலும் தொலைக்காட்சியிலும் பயன்படுகின்றது. கண்திரை (Retina) : கண்ணின் உட்புறமுள்ள ஒளி யுணர்பகுதி. இதனுடன் தொடர்புள்ள ஒளியுணர் நரம்புகள் துடிப்புக்களை மூளையின் பார்வை மையத்திற்குக் கொண்டு செல்வதால் நாம் பொருள்களைக் காண்கின்ருேம். கண்மணி (Pupil): இது பாவை' எனவும் வழங்கப் பெறும். விழித்திரையின் நடுவிலுள்ள வட்டமான துவார மாகும் இது. ஒருவரது கண்ணை நாம் உற்று நோக்குங்கால் இப்பகுதி கருநிறமாகக் காணப்பெறும்