பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இளைஞர் தொலைக்காட்சி அமைந்துள்ளது. அதுபோல், இன்று மேல்நாடு களில் தொலைக் காட்சிச் சாதனம் வீடுதோறும் உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இரஷ்யா முதலிய நாடுகள் இத்துறையில் நன்கு முன்னேறியுள்ளன. ஜப்பான், தாய்லாந்து முதலிய கீழ்நாடுகளிலும் தொலைக் காட்சி நிலை யங்கள் இயங்கி வருவதாக அறிகின்ருேம். நமது நாட்டிலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்ட முடிவுக் காலத்திற்குள் தொலைக்காட்சி அன்ருடப் பொழுது போக்குச் சாதனமாக அமைந்து விடு மென்று எதிர்பார்க்கலாம். தொலைக் காட்சி நிகழ்ச்சிகளே ஓரிடத் திலிருந்து பிறிதோரிடத்திற்கு அனுப்புவதில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதலாவதாக, தொலைக்காட்சிப் படமாக வேண்டிய நிகழ்ச்சியை, அல்லது பொருளே, துருவிப் பார்த்தல் (Scanning) என்ற நிகழ்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இரண் டாவதாக, இவ்வாறு நிகழ்த்திய செயலால் கிடைத்துள்ள ஒளித்துடிப்புக்களே மின்துடிப்புக் களாக மாற்றுதல் வேண்டும். மூன்ருவதாக, இந்த மின் துடிப்புக்களை மீண்டும் ஒளித்துடிப்புக்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றும்பொழுது முதலில் கண்ட நிகழ்ச்சி அல்லது பொருளின் பிம்பம் திரும்பவும் படைக்கப்பெறக்கூடியதாக இருக்க வேண்டும். முதலிரண்டு. கட்டங்களேயும்