பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலியும் தொலைக்காட்சியும் 9 ஒளியையும் ஒலி அலைகளேயும் பரப்புவதற்குப் பயன்படும் கருவிகள் பொதுவாக அமைப்பில் ஒத்துள்ளன. ஒளிபரப்பும் கிலேயத்தில் ஒரே வான் கம்பியின் (Aerial) மூலம் நிகழ்ச்சிகள் அனுப்பப் பெறுமாயினும் ஒலியை அனுப்ப ஒரு தனியமைப் பும் ஒளியை அனுப்ப ஒரு தனி ஏற்பாடும் இருப் பதைக் காணலாம். வானெலி நிலையத்திலிருப் பதைப் போலவே ஒலி அலைகளே ஏற்பதற்கு ஒலி வாங்கி (Microphone) என்ற கருவி உள்ளது. நிகழ்ச்சிகளைப் படமாகப் பிடிப்பதற்கென்று பிரத் தியேகமான ஒரு தொலைக்காட்சிக் காமிரா (Television camera) இருக்கின்றது. அங்ங்னமே, ஒளியை ஏற்குமிடத்திலும் உள்ள அமைப்பில் ஒலியையும் ஒளியையும் ஏற்கும் ஒரு பொதுப் பகுதியும், ஒலி. யைக் கேட்கச் செய்ய ஒரு தனிப் பகுதியும் படங் களைக் காணச் செய்ய ஒரு தனிப் பகுதியும் இருப் பதைக் காணலாம். ஏற்கும் இடத்திலும் ஒலியை யும் ஒளியையும் ஒரே வான் கம்பிதான் ஏற். கின்றது. ஏனைய கூறுகள் அனைத்திலும் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுபோலவே காணப்பெறு கின்றன. இனி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்பெறும் முறைகளையும், அவை ஏற்கும் கருவியில் தெரியும் விவரங்களையும் காண்போம். அதற்கு முன் ஒளியின் தன்மைகளைச் சிறிது அறிவோம்.