பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளியின் தன்மைகள் ஒளி அகிலம் முழுவதும் சூழ்ந்துள்ளது. அது சதா கனவுநிலையிலேயே இருப்பதால் அதனைப் பற்றி நாம் அதிகமாகச் சிந்திப்பதில்லை. ஒளியும் அதனேயொட்டிய வெப்பமும் இல்லையாயின் இவ் வுலகில் தாவரங்களும் உயிர்களும் தோன்ருமல் வெறும் பாழிடமாகவே இருக்கும். சூரியனும் எண்ணற்ற நட்சத்திரங்களும் நமக்கு வேண்டிய ஒளியையும் வெப்பத்தையும் தருகின்றன ஆயினும், காம் பெரும்பாலான ஒளியைச் சூரிய னிடமிருந்தே பெறுகின்ருேம். மிகத் தொலைவிலுள்ள நட்சத்திரங்களிட மிருந்து வானவெளியைக் கடந்து ஒளி வந்து கொண்டிருக்கின்றது. தொலைநோக்கி போன் றுளள கருவிகளிலுள்ள வில்லைகள், ஆடிகளின் துணையால் அவ் விண்மீன்களின் பருமன், அவை செல்லும் வேகம், அவற்றின் தொலைவு, அவற். றின் வேதியியல் அமைப்பு போன்றவற்றை அறிகின்ருேம். அங்ங்னமே நுண் பெருக்கியின் (Microscope) துணையால் கண்ணுக்குப் புலனாகாத பாக்டீரியா போன்ற நுண்ணிய பொருள்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தம் புத்தகத் திலிருந்து பிரதிபலிக்கும் ஒளி அதிலுள்ள சொற் களின் பிம்பங்களைக் கண்ணுக்குள் கொண்டு