பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இளைஞர் தொலைக்காட்சி கம்பிகள்போல் காணப்படுகின்றன. சக்கரம் அதிவேகமாகக் சுழலுங்கால் அஃது ஆரைக் கம்பிகள் இல்லாதது போல் தோன்றுகின்றது. சிறுவன் ஒருவன் கார்த்திகைத் தீப்பொரிப்பைச் சுற்றுங்கால் அஃது ஒரு ஒளி வளையம்போல் காட்சியளிக்கின்றது. இங்ங்ணம் எடுத்துக்காட்டுக் களைப் பெருக்கிக் கொண்டே போகலாம். சினிமாப் படங்களே நமக்குத் தோற்றுவிக்கும் செயலில் நமது கண்ணுக்குள்ள இக்குணத்தைப் பயன் படுத்தி, இவ்வாறு தனித் தனியாக எடுக்கப்பெற்ற காட்சிப் படங்களைக் கொண்டு அவை இயங்குவன போல், காட்சிகளைத் தொடர்ச்சியாகத் தோன்றச் செய்கின்றனர்; கண்ணே ஏமாற்றும் இக் கண்கட்டி வித்தைதான் தொலைக்காட்சியிலும் பயன்படு கின்றது. இதைப் பின்னர் விளக்குவோம்.