பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மின்னணுக் குழல்கள் வானெலியைப்பற்றிப் படிக்கும் பொழுது அலெக்ஸாந்தர் கிராஹம் பெல் (Alexander Graham Bell) என்பவர்தாம் ஒலியை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குக் கம்பிகளின் மூலம் அனுப்பும் முறையைக் கண்டறிந்தார் என்று கூறினுேம். அதன் பிறகு ஒலியைக் கம்பிகளின்றி எங்ங்னம் அனுப்புவது என்பதைப்பற்றி அறிவியலறிஞர்கள் ஆராயத் தொடங்கினர். இங்கிலாந்தில் இத்தகைய செய்தித்தொடர்பைக் கம்பியில்லாத்தந்தி (Wiresles) என்று வழங்குவர். அமெரிக்காவில் இதனை வானுெலி (Radio) என்று குறிப்பிடுவர். வானெலி கண்டறியப்பெற்று இன்னும் எழுபது யாண்டுகள் கூட ஆகவில்லை என்ருலும், அதில் பயன்படும் ஒலி, மின்சாரம் ஆகியவைபற்றிய விதிகள் நூற்றுக் கணக்கான யாண்டுகளுக்கு முன்னர் இருந்த அறிவியலறிஞர்கள் அறிந்தவையே யாகும். ஃபிராங்க்லின், வோல்டா, ஆம்பியர் முதலி யோர் மின்சாரம்பற்றிய முக்கியமான கண்டு பிடிப்புக்களுக்குக்காரணமானவர்கள். ஓம்ஹெல்ம் ஹோல்டிஸ் கிராஹம்பெல் முதலியோர் ஒலிபுற்றிய துறையில் சிறப்பாகப் பணியாற்றினர். அதன் பிறகு கி. பி. 1888 இல் தாமஸ் ஆல்வா எடிசன்