பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

அறிவியல், மனித நாகரிகத்திற்கும் உலக முன்னேற்றத்திற்கும் மிகமிக இன்றியமையாதது. மக்கட் சமுதாயம் சுருங்கிய காலத்தில் பெருகிய இன்பங்களைப் பெற்று மகிழத் துணைசெய்வது அறிவியல். இத்தகைய அறிவியல் துறை, மேலை நாட்டறிஞர்களின் பல புதிய கண்டுபிடிப்புக்களால் நாடோறும் ஆக்கம் பெற்று வளர்த்துவரக் காண்கிறோம். அவை வானெலி, மின்னாற்றல், தொலைக்காட்சி எனப பல வியத்தகு கண்டுபிடிப்புக்களாகும்.

இவற்றுள் தொலைக்காட்சி (Television) என்பது அறிவியல் துறையில் மிகப்பெரிய புரட்சியாகும். நமது அறிவுக் கெட்டாத அதிசயக் காட்சியாகிய இதைப்பற்றிச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முறையில் அமைந்துள்ளதே “இளைஞர் தொலைக்காட்சி” என்னும் இச்சிறு நூல்.

இளைஞர் வானெலி ‘அதிசய மின்னணு’ ஆகிய நூல்களை எழுதிய திரு. ந. சுப்புரெட்டியாரவர்களே இதனையும் எழுதியுள்ளார்கள். அவர்கட்குக் கழகத்தின் நன்றி உரித்தாகுக.

அறிவுக்கு ஆக்கம்தேட விழையும் அனைவரும் இதனைப் போற்றிப் பயின்று பயன்பெறுவார்களாக.

சைவசித்தாந்த துற்பதிப்புக் கழகத்தார்.