பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இளைஞர் தொலைக்காட்சி புத்தகத்தைப் படிப்பது போலவே இந்த மின் னணுக்கற்றையும் கண்ணுடித் தட்டினே இடப்புற மிருந்து வலப்புறமாகத் துருவிப்பார்க்கின்றது. இவ்வாறு அக் கற்றை துருவிப் பார்த்தல் இரண்டு மின்காந்தச் சுருள்களின் (Magnetic coils) துணை யால் மிகத் திருத்தமாகவும் நுட்பத்திறனுடனும் நடைபெறுகின்றது. இந்த இரண்டு சுருள்களும் ஒளிக் கற்றையை அது செல்லவேண்டிய திசைக் கேற்றவாறு ஒதுங்கச்செய்கின்றன. இந்த ஒளிக் கற்றை இரண்டு மின் காந்தச் சுருள்களாலும் இரும்புக் கம்பிபோல் கவரப் பெறுகின்றது. சுருள்களின் காந்த உறைப்பில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றமும் கற்றையின் இயக்கத்தைப் பெரிதும் பாதிக்கின்றது. இந்தக் காந்தங்களுள் ஒன்று கற்றையின் செங்குத்து இயக்கத்தையும், மற். ருென்று படுக்கை மட்ட இயக்கத்தையும் கட்டுப் படுத்துகின்றன. இந்த மின்னனுக் கற்றை கண்ணுடித் தட்டினே விடிை யொன்றுக்கு முப்பது தடவைகள் வீதம் துருவிப் பார்க்கின்றது. ஒளிக்கற்றை ஒவ்வொரு நேர் மின்சாரக் கலங் களின்மீது படுங்கால் அக்கலங்கள் தாம் முன்னர் இழந்த மின்னணுக்களைத் திரும்பவும் பெற்றுத் தம் இழப்பினே ஈடுசெய்து கொள்ளுகின்றன. ஒவ் வொரு மின்கலமும் தாம் இழந்த எண்ணிக்கை மின்னணுக்களைத் திரும்பவும் கவரும்பொழுது