பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இளைஞர் தொலைக்காட்சி அடைகின்றன. அங்கிருந்து அவை வானெலி அலைகளைப்போலவே நாலா புறங்களிலும் ஒளி பரப்பப்பெறுகின்றன. இவ்வாறு ஒளிபரப்பப் பெறும் மின்சாரப்படச் சைகை அடையாளம் பார்வைச் சைகைஅடையாளம் (Video signal) என்று வழங்கப் பெறுகின்றது. இவ்விடத்தில் இன்னொரு முக்கிய செய்தி யையும் கினேவில் கொள்ளுதல் வேண்டும். மின் னணுத் துப்பாக்கியினின்றும் வெளிப்படும் ஒளிக் கற்றையைச் சரியான முறையில் இயக்கும் காந்தங் களைக் கட்டுப்படுத்தும் மின்னேட்டமும் மின்சாரப் படஅலேகளுடனும் வானெலி அலைகளுடனும் சேர்த்து அனுப்பப்பெறுகின்றது. இந்த மின்னேட் டம் அலைகளைப்போலவே ஏற்கும் கருவியினுள் புகுந்து அங்குள்ள இரண்டு மின்காந்தங்களே கிலேயத்திலுள்ள மின்காந்தங்களின் இயக்கத்திற்கு சரியாக ஒத்த முறையில் இயங்கச் செய்கின்றது. இன்று ஐகனஸ்கோப்பு மிகவும் மேம்பாடு அடைந்துள்ளது; ஆர்த்திகான் (Orthicon) என்பது அத்தகைய மேம்பாடு அடைந்த குழல் களுள் ஒன்று. ஆர்த்தோ' (Ortho) என்ருல் நேரான (Straight) என்பது பொருள்; ஐகான்' (Icon) என்பதைப் ՛ւյւ-ւն՚ என்று (5ாம் அறிவோம். ஆர்த்திகான்' என்பது நேரான படம் என்பதைக் குறிக்கின்றது. -