பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைக்காட்சிப் படங்கள் 59. ஆட்டமின்றிக் காணப்பெறுகின்றன. நாமும் கண்ணுக்கு யாதொரு சிரமமுமின்றி அவ்ற்றைக் கண்டு களிக்கின்ருேம்: - - ஒரு தொலைக்காட்சிப் படம் 525 வரிகளைக் கொண்டு வரையப்பெறுகின்றது. இந்த வரிகள் யாவும் படுக்கை நிலையில் உள்ளவை. 525 வரி களைக்கொண்ட ஒரு சட்டம் உண்டாகும். பொழுது ஒளிக்கற்றை 525 தடவைகள் திரை யின் குறுக்கே போய்வருகின்றது. ஒவ்வொரு விடிையிலும் 30 சட்டங்கள் (படங்கள்) உண்டா கின்றன என்பதை நாம் அறிவோம். ஆகவே, ஒவ்வொரு விடிையிலும் அக்கற்றை இடமிருந்து வலமாக அத்திரையின் குறுக்கே 525x30=15,750 தடவைகள் போய் வருகின்றன. இந்த வேகம் மின்னல் வேகத்தினும் அதிகமாகும். இதன் முன் னர் மின்னல் வேகம்கூட நத்தையின் வேகத்தை விடக் குறைவாகத் தோன்றும்; அவ்வளவு வேக மாக ஒளிக்கற்றை நகர்ந்து செல்லுகின்றது. மேற்கூறிய முறையில் எடுக்கப்பெற்று. அனுப்பும் கருவிக்கு வரும் பார்வைச் சைகைச் செய்திகள்' எனப்படும் மின்சாரப் படச் சைகைச் செய்திகள் எவ்வாறு ஒளிபரப்பப்பெறுகின்ற என்பதை அடுத்துக் காண்போம்.