பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வாகன அலைகள் நம்மைச் சுற்றிலும் சீதா ஆற்றல் செயற் பட்டுக்கொண்டே இருக்கின்றது. இந்த ஆற்றல் ஒளி, வெப்பம், ஒலி ஆகிய வடிவங்களில் செயற் படுகின்றது. இந்த ஆற்றல் அலேகளாகப் பிரயா .ணம் செய்கின்றது. இந்த அலைகள் இன்னவை என்று இன்னும் ஒருவரும் அறுதியிட்டு உரைக்க வில்லை. எனினும், நாம் அவற்றைக் கட்டுப் படுத்தக் கற்றுக்கொண்டுள்ளோம்; அவற்றை உற்பத்தி செய்யவும் அறிந்துள்ளோம். வானொலி யைப்பற்றிப் படிக்கும்பொழுதும் இந்த அலைகளைப் பற்றிக் குறிப்பிட்டோம். ஒளி, வெப்பம், வானெலி அலைகள் யாவும் மின்காந்த அலைகளாகும். இந்த மின்காந்த அலைகள் என்ன என்பதைப்பற்றி அறிவியலறிஞர்கள் இன்னும் திட்டமாக அறிந்து கூறவில்லே. ஆல்ை, அவை இயங்கும் மின்சாரம்போல் காணப் பெறுகின்றன. பெரும்பாலும் இவை மின்னணுக் களின் பண்புகளைப் போன்ற பண்புகளைப் பெற் றுள்ளன என்ருலும், அவற்றுக்குப் பொருண் மையோ (Mass) அல்லது திடஉருவமோ இல்லை. தொலைக்காட்சிக் காமிராவிலிருந்து வெளிப் படும் மின்சார சைகைச்செய்திகள் பெருக்கும்