பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூ ல் முகம் முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே-ஒருகைமுகன் தம்பியே சின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் கம்பியே கைதொபுவேன் கான், -கக்கிரர், புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லே " என்று அந்தப் பேதை உரைத்ததை எண்ணி, தமிழ்த்தாய் இந்த வசை எனக்கு எய்திடலாமோ? என்று ஏங்குவதாகக் கற்பனை செய்கின்ருர் புதுமைக் கவிஞர் பாரதியார். தமிழ்த் தாய்க்கு அந்தக் குறை-அந்த ஏக்கம்-இல்லா தொழியச் செய்வது இன்றைய தமிழ் இளைஞர்களின் கடமை. இதற்கு வேண்டிய அறிவியற் கலையறிவு இளமையிலிருந்தே அவர்களிடம் அமைதல் வேண்டும்; அதற்குரிய ஆர்வமும் அவாவும் சிறுவயதிலிருந்தே அவர்களிடம் கிளர்ந்தெழல் வேண்டும். அந்த முறையில் இளஞ் சிருர்களை ஊக்குவிக்க இந்த வரிசை நூல்கள் பெரிதும் துணை செய்யும் என்பது என் திடமான நம்பிக்கை. சொல்லுந் திறமை (Expressive ability) தமிழ் மொழிக்கு அமைய வேண்டுமாயின், தமிழ் பயிற்று மொழியாக அமைந்து தமிழிலேயே அறிவியற் கலைகள் எழுதப் பெறுதல் வேண்டும் , வகுப்புக்களிலும் விளக்கப் பெறுதல் வேண்டும். இந்தவித முயற்சிகளின்றித் தமிழ் மொழியில் அறிவியற் கலைகள் தோன்ற வேண்டும் என்று வாளா நினைப்பது மனக்கோட்டை கட்டுவது போலாகும். அரசினரும் பல்கலைக் கழகத்தினரும் இத்துறையில் ஒருங்கிணைந்து உள்ளத் தூய்மையுடன் பணியாற்ற முன் வருதல் வேண்ம்ே - இந்த நூலை வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கு (Syndicate)-சிறப்பாக