பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§6 இளைஞர் தொலைக்காட்சி தட்ட மிக அகன்ற தூரங்களில் அமைக்கப் பெறுகின்றன. அவ்வாறு அமைக்கப்பெறுங்கால் இரண்டு நிலையங்களின் பார்வை ஒன்றன்மீ தொன்று விழும்படியாக இருக்கும். கிலேயங் களின் உச்சியில் பெரிய பிரதிபலிக்கும் அமைப் புக்கள் இருக்கும் ; அவை தம்மை நோக்கி அனுப்பப்பெறும் தொலைக்காட்சிச் சைகைச் செய்திகளே ஏற்று மீண்டும் பிரதிபலிக்கின்றன. அஞ்சல் கிலேயங்களினுள் பிரத்தியேகமான கருவி யமைப்புக்கள் இச் சைகைச்செய்திகளைப் பலப் படுத்தி மீண்டும் அடுத்த நிலையத்திற்கு அனுப்பு கின்றன. இந்தக் கருவியமைப்புக்கள் தாமாகவே இயங்குகின்றன; அவற்றை இயக்குவதற்கு அங் கிலேயங்களில் ஒருவரும் இருக்கத் தேவையில்லை. மேற்கூறிய அஞ்சல் கிலேயங்கள் யாவும் பிரத்தியேகமான அதிர்வு - எண்களேக் கையாளு கின்றன. ஆகவே, அவற்றை நம்முடைய ஏற்கும் கருவிகளில் கொள்ளமுடியாது. ஆனால், நம் ஊரி லுள்ள தொலைக்காட்சி கிலேயம் அந்த அதிர்வு - எண்களில் வரும் நிகழ்ச்சிகளே ஏற்று நம்முடைய ஏற்கும் கருவிகளுக்கேற்றவாறு அதிர்வு - எண் களில் திரும்பவும் ஒளிபரப்புகின்றன. நாமும் அந் நிகழ்ச்சிகளே நடைபெறுகின்றவாறே உடனுக் குடன் கண்டு மகிழ்கின்ருேம். -