பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. செவியமுது, பெறும் முறை இதுகாறும் கூறியவற்ருல் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் காட்சி கள் எவ்வாறு படமாகித் தொலைவிலுள்ளவர்கட் குத் தெரிகின்றன என்பதை ஓரளவு தெரிந்து கொண்டோம். இனி, நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மக்களின் பேச்சும், இசையும், ஏனேய குறிப்புக் களும் எவ்வாறு நமக்குக் கேட்கின்றன என்பதை ஒரு சிறிது விளக்குவோம். "இளைஞர் வானுெலி'யைப் படித்த காம் ஒலி யின் தன்மைகளில் சிலவற்றையும் அவ்வொலி எவ்வாறு கம்பிகளின் மூலம் அனுப்பப்பெறுகின் றது என்பதையும், அது கம்பியின்றி வானி வழியாக எவ்வாறு அனுப்பப்பெறுகின்றது என்பதையும் ஓரளவு அறிந்துகொண்டுள்ளோம். ஏதாவது ஒரு பொருள் அதிரும்பொழுது ஒலி உண்டாகின்றது என்பதை நாம் அறிவோம். அவ்வாறு அதிரும் பொருள் முரசின் தலையாக இருக்கலாம்; அல்லது வீணையின் நரம்பாகவும் இருக்கலாம். ஏதாவது ஒரு பொருள் ஒரு மரத் தாலான மேசையின்மீது விழுங்கால், அம்மேசை யின் பலகையும் அதிர்கின்றதைக் காண்கின்ருேம் அல்லவா ? . -