பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவியமுது பெறும் முறை 87 ஒர் அமைப்புடனும் இணைந்துள்ளன. குழல் வடி வுடைய அமைப்பில் ஓரளவு திரவம் நிறைக் துள்ளது. மேலே குறிப்பிட்ட அதிர்வுகளால் ஏற்படும் காற்றலேகள் நம்முடைய செவிகளே யடைந்ததும், கம்முடைய செவிப்பறை காற்றின் ஒவ்வொரு சுருங்கிச் செறிதலுக்கும் உள்நோக்கித் தள்ளப் பெறுகின்றது; காற்றின் ஒவ்வொரு விரிந்து அருகு தலுக்கும் வெளிநோக்கி இழுக்கப்பெறுகின்றது. இங்ங்ணம் உள்ளும் புறமுமாக இயங்கும் செவிப் பறையால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வுகள் காதின் சிற்றெலும்புகளே அதிர்வுகளுக் கேற்றவாறு ஒத்து அசையச் செய்கின்றன. இந்த எலும்பின் அசைவுகள் நத்தை எலும்புக் கூட்டி லுள்ள திரவத்தில் சிற்றலைகளே (Ripples) உண்டாக்குகின்றன. இந்தத் திரவத்திற்கு மேற் பக்கத்தில் கயிறுபோன்ற நார் அமைப்புக்களும், அந்த நார் அமைப்புக்களில் நுண்ணிய மயிர் போன்ற உறுப்புக்களும் உள்ளன. திரவத்தில் உண் டாகும் சிற்றலைகள் இந்த நார் அமைப்புக்களே இப் படியும் அப்படியும் ஊசலாடச் செய்கின்றன. இதல்ை மயிர் அமைப்புக்கள் ஒருவித ஒலியுணர்ச் சியை அடைந்து அதனேக் கேள்விப்புல நரம்பு மூலம் (Auditory nerves) மூளைக்குத் தெரிவிக்கின் றன். மூளை ஒலிகளை இனங்கண்டு அறிகின்றது.