94
இளைஞர் வானொலி
மின் தங்கி (Condenser) : மின்னூட்டங்களைச் சேகரித்து வைக்கக் கூடிய ஒருவகை அமைப்பு. இது வானொலியில் பயன்படுவது,
மின்னணு (Electron) : மிக மிக நுண்ணிய ஒரு வகை மின்துணுக்கு ; எதிர் - மின்னூட்டத்தைக் கொண்டது. ஒரு கம்பியில் மின்னணுக்கள் தொடர்ந்து செல்வதால்தான் மின்னோட்டம் உண்டாகின்றது. அணுவின் மையத்திலுள்ள உட்கருவினைச் சுற்றி இத்துணுக்குகள் ஓயாமல் ஓடிக்கொண்டுள்ளன.
மின்னணுக்குழல் (Electron Tube) : செயற்படக் கூடிய மின்னணுக்கள் அடங்கிய குழலே மின்னணுக்குழல் என்பது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பெரிதும் பயன்படுவது.
மின்னுக்கப்பொறி (Dynamo) : மின்னாற்றலைப் பெருமளவில் உற்பத்தி செய்ய உதவும் ஒரு கருவி அமைப்பு.
மின்னோட்டம் (Electric current) : ஒரு கம்பியினுள் மின்னணுக்கள் தொடர்ச்சியாக ஓர் அருவிபோல் நகர்ந்து செல்வதே மின்னோட்டம் என்பது. இவ்வணுக்கள் எதிர்- மின் முனையிலிருந்து நேர் - மின் முனையை நோக்கி நகர்கின்றன.
வலைக்கம்பி (Grid): இது மின்னணுக்குழலின் ஒரு பகுதி. இது நேர் - மின் முனைக்கும், எதிர் - மின் முனைக்கும் இடையே செல்லும் மின்னணுக்களைக் கட்டுப்படுத்துகின்றது.
வாகன அலைகள் (Carrier Waves) : ஒலியைப் பரப்பும் கருவியினின்று சதா வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே உயரமுள்ள அலைகள் இவை. ஒலிவாங்கியின் முன்னிருந்து பாடுவோரின் அல்லது பேசுவோரின் ஒலி மாறுபாடுகளைச் சுமந்து செல்வதால் இப்பெயர் பெறுகின்றன.
வானி (Ether): வான வெளியில் நிறைந்திருக்கும் கண்காணா ஒரு பொருள் ; இதைத் தொட்டு உணர முடியாது. இது