இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நற்பேறான தற்செயல்
7
தால், ஒரு மின்னோட்டத்திற்கும் ஒரு காந்தத்திற்கும் இடையே யாதாவது ஒரு தொடர்பு இருக்கவேண்டும் என்று காரணகாரிய முறையில் ஊகிக்கலானார். ஒரு சில ஆண்டுகட்குப்பிறகு —
படம் 3. வகுப்பில் அறிவியல் பாடம் நடைபெறுகின்றது.
1820 இல்-இந்தப் பேராசிரியரின் இச் சிறிய முக்கியக் கண்டுபிடிப்பின் காரணமாக மின் காந்தம் (electro-magnet) புனந்தியற்றப்பெற்றது. இதைப்பற்றிப் பின்னர்க் காண்போம்.
மின்காந்தம் மட்டிலும் கண்டுபிடிக்கப் பெறாதிருந்தால் இன்று நமக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளைத் தரும் வானொலி (radio) தோன்றியிராது. தொலைவில் நிகழும் காட்சிகளையும் கண்டு களிக்கவல்ல தொலைக் காட்சியும் (television)