8
இளைஞர் வானொலி
வந்திராது. மின்னாக்கப்பொறி (dynamo) தோன்றியிராது. மின்சாரத்தால் செயற்படும் மோட்டார்கள், பெரிய தொழிற்சாலைகள், தந்தி, தொலைபேசி, மின்விளக்குகள், மின்சார மணிகள் முதலிய அன்றாட வசதிகள் தோன்றுவதற்கே வாய்ப்பே இல்லாது போயிருந்திருக்கும். சென்னை போன்ற நகரில் ஒடிக்கொண்டிருக்கும் மின்சார இரயில் வண்டிகள், பல்லடுக்கு மாடிகட்கு நம்மைத் தூக்கிச் செல்லவல்ல மின்தூக்கிகள், நகரங்களில் இரவில் போக்கு- வரவினைக் கட்டுப்படுத்தும் தாமாக இயங்கும் ஒளி அடையாளங்கள், பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இடங்களில் நிகழும் செய்திகளைத் தருவதற்கும் புகைப் படங்களை உடனுக்குடன் அனுப்புவதற்கும் உரிய மின்சாரச் சாதனங்கள் - ஆகியவற்றை நாம் பெற்றிருக்கவே முடியாது. கூர்ந்து நோக்கினால், மின்காந்தம், நம்மைச் சுற்றிலும் இருக்கிறது. மின்காந்தம் இல்லாமல் நம்முடைய இன்றைய நாகரிகமே வளர்ந்திருக்கமுடியாது. நாமும் பழங்கால மனிதர்களைப்போல் யாதொரு வாழ்க்கை வசதிகளின்றித் திண்டாடிக்கொண்டிருக்க நேரிடும். இவ்வளவு வசதிகட்கும் மின்கலத்தின் கம்பிகள் தற்செயலாக அங்தப் பேராசிரியரின் திசைகாட்டிக்குக் கீழ் இருந்தமையே காரணமாகும்!