3.எடிசனின் வெற்றி
திருவல்லிக்கேணிக் கடற்கரையிலிருந்து கொண்டு கடல் அலைகளின் இரைச்சலைக் கேட்கின்றோம். இராஜா அண்ணாமலை மன்றத்தில் சாய்வு நாற்காலியில் மின்விசிறிக்குக் கீழ் இருந்து கொண்டு இன்னிசைக் கச்சேரி யொன்றினைக் கேட்கின்றோம். இரண்டிலும் கேட்கும் ஒலிகள் உண்மையில் காற்றில் ஏற்படும் அதிர்வுகளேயாகும். இன்று மனிதன் ஒலிகளையுண்டாக்கும் அதிர்வுகளைப் பதிவுசெய்யும் முறையையும், அந்த அதிர்வுகளைத் திரும்பவும் வேண்டும்போது உண்டாக்கும் முறையையும் அறிந்துகொண்டிருக்கின்றான். இது அமெரிக்க நாட்டு அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் செய்த பரிசோதனை ஒன்றின் வெற்றியின் விளைவாகும்.
எடிசன் அமெரிக்கத் தந்திஅலுவலகம் ஒன்றில் தந்தி இயக்குபவராகப் (operator) பணியாற்றி வந்தார். தாம் தம் அனுபவத்தில் கண்டறிந்த பொறியமைப்பினைக்கொண்டு தந்திச் செய்திகளை விரைவாகப் பதிவுசெய்து கொண்டிருந்தார். எடிசனும் அவருடன் பணியாற்றிய மற்ரறொரு இளைஞரும் இக்கருவி அமைப்பினைக் கொண்டு விரைவாகவும் திறமையாகவும் பணி யாற்றிவந்தனர். எடிசன் பணியாற்றிவந்த தந்தி