எடிசனின் வெற்றி
11
திருந்ததனால், மற்றவர்கள் இந்த இரகசியத்தை அறியக் கூடவில்லை.
ஒரு நாள் இவர்கள் கையாண்ட கருவி அமைப்பு சரியாகச் செயற்படவிலலை. அஃது அமெரிக்கத் தலைவரின் தேர்தல் நடைபெறும் சமயம்; நாடெங்குமிருந்து எண்ணற்ற செய்திகள் தந்தி அலுவலகத்தில் குவிந்த வண்ணமிருந்தன. இந்த இளைஞர்களால் தம் வேலையைச் சமாளிக்க முடியவில்லை. செய்திகளை எழுதுவதில் அவர்கள் இரண்டு மணிநேரம் பிற்போக்கில் இருந்தனர். இந்த அலுவலகத்தின் பணியை நம்பியிருந்த செய்தித்தாள் அலுவலகங்கள் தந்தி அலுவலகத்திற்குத் தம்முடைய புகார்களை அனுப்பின. தந்தி அலுவலக மேலாளர் விசாரணை நடத்திஆர். எடிசனின் இரகசியம் வெளியாயிற்று. அன்றுமுதல் அவர் தம்முடைய தானாகப் பதிவு செய்யும் கருவியைப் பயன்படுத்தக் கூடாது என்ற தடை விதிக்கப்பெற்றது.
ஆனால், எடிசன் இப்பரிசோதனையை வீட்டில் தொடர்ந்து நடத்தி வந்தார், தங்தி ஒலிப்புக்களை (clicks) அச்சு அடையாளங்களாக (marks) மாற்றுவதிலும், இந்த அடையாளங்களை திரும்பவும் ஒலிகளாக மாற்றுவதிலும் அவர் ஈடு பட்டிருந்தார். இந்தக் கருவியமைப்பினை நாளுக்கு நாள் மேம்பாடடையச் செய்து கொண்டே