உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இளைஞர் வானொலி


வந்தார். அது கி. பி. 1877 இல் கிட்டத்தட்ட நன்னிலைக்கு வந்தது. இந்தக் கருவிதான் விரும்பும் வேகத்தில் செய்திகளைத் திரும்ப உரைத்தது!

ஒருநாள் இக் கருவியினைக் கொண்டு எடிசன் பல்வேறு வேகங்களில் அதனை இயக்குவதில் சோதனை செய்துகொண்டிருந்தார். ஒரு சமயம் தாம் மேற்கொண்ட வட்டக் காகிதம் வேகமாகச் சுழலும்போது ஒருவித இசையொலியினைத் தருவதைக் கண்டார். அதே சமயம் தொலை பேசியிலும் அலெக்ஸாந்தர் கிரஹாம் பெல் (Alexander Graham Bell) அவர்களின் கருத்துகளைப் பொருத்தி அக் கருவியினை மேம்பாடு செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த காலம் ஆகும். இசை யொலியினைக் கேட்ட அவர் மனத்தில் மானிட ஒலியுண்டாக்கும் அதிர்வுகளையும் பதிவுசெய்து திரும்பவும் உண்டாக்கலாம் என்ற கருத்துத் தோன்றியது. உடனே அவசரமாக ஓர் அமைப்பினை உண்டாக்கி இச் சோதனையை மேற்கொண்டார். தாம் கையாண்ட மெழுகு தடவிய காகிதத்தில் மிகவும் மெல்லிய குரல் திரும்பவும் உண்டாவதைக் கேட்டார். உடனே தம்முடைய ஆய்வுக் குறிப்புப் புத்தகத்தில், "எதிர் காலத்தில் மானிடக் குரலைத் தேக்கிச் சரியாக வெளியிடமுடியும்” என்று குறித்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/20&oldid=1394564" இலிருந்து மீள்விக்கப்பட்டது