உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எடிசனின் வெற்றி

13


அவருடன் பணியாற்றிய சார்லஸ் பாட்சிலர் (Charles Batchelor) என்ற பணியாளன் அங்ஙனம் செய்ய இயலாது என்றும், அப்படிச் செய்தால் தான் ஒரு பெட்டி சிகரெட்டுகளைப் பந்தயம் வைப்பதாகவும் கூறினான். எடிசனும் அந்தப் பங்தயத்தை ஒப்புக்கொண்டார்.

மற்ரறொருநாள் ஒரு காகிதத்தில் ஒவியம் ஒன்று வரைந்து அதன்படி கருவியொன்றினை அமைக்குமாறு ஒரு தச்சனை ஏவினார். தச்சன் அதன் பயனைப்பற்றி வினவினான். எடிசனும் தாம் மானிடக் குரலைப் பதிவுசெய்யப் போவதாகக் கூறினார். “இப்பொழுது தங்கட்கு ஒரு பெரிய பைத்தியம் பிடித்துக்கொண்டு விட்டது!” என்று ஏளனம் செய்தான் தச்சன். ஆயினும், அவன் ஒன்றிரண்டு நாட்களில் அந்த மாதிரி அமைப்புக் கருவியை ஆயத்தம் செய்து கொண்டு வந்தான். கருவியைக் கொடுக்கும்போது ஏளனமாகப் “பல்லை இளித்துக்கொண்டே” கொடுத்தான்.

எடிசன் அக்கருவியின் உருளையின்மீது ஒரு வெள்ளியத் தகட்டினைப் போர்த்தினார். அதன் மீது ஒர் ஊசி படுமாறு பொருத்தினார்; ஊசியோடு தொடர்புள்ள புனலின் வழியாக,

“Mary had a little lamb,
Its fleece was white as snow.......”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/21&oldid=1394568" இலிருந்து மீள்விக்கப்பட்டது