உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இளைஞர் வானொலி

 என்று அடிகளை உரத்துப் பாடினார். அதன் பிறகு திரும்ப உண்டாக்கும் விதானத்தைத் (diaphragm) தக்கவாறு பொருத்தி அக் கருவியினை இயக்கியவுடன் மேற்கூறிய பாடலின் அடிகள் அப்படியே திரும்பக் கேட்டன ! முதல் பரிசோதனையிலேயே இவ்வளவு தெளிவாக வரும் என்று எடிசன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, அவர் திடுக்கிட்டு வியந்தார். அருகில் நின்ற தச்சனும் ஆனந்தக் கூத்தாடினான். இங்ஙனம் ஒலியினைப் பதிவுசெய்யும் கருவிதோன்றியது. சார்லஸ் பாட்சிலரும் தன் பந்தயப் பொருளை இழந்தான். எடிசனின் பரிசோதனை வென்றது ! இதைப்பற்றிச் சற்று விரிவாகப் பின்னர்க் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/22&oldid=1394569" இலிருந்து மீள்விக்கப்பட்டது