உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னோட்டம்

17


யுடையவை. இவை அணுவின் உட்கருவினைச் சுற்றியுள்ள அயனப் பாதைகளில் (orbits) சுழல்பவை.

எல்லா மின்சாரக் கம்பிகளும் தாமிரத்தினால் ஆனவையாதலின், தாமிர அணுவினைச் சிறிது கவனிப்போம். தாமிர அணுவின் அயனப்பாதைகளில் 29 மின்னணுக்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒவ்வொரு தாமிர அணுக்களிலுமுள்ள 29 மின்னணுக்களில் ஒரு சில தம்முடைய அணுக்களிலிருந்து அடுத்த அணுவிற்கு மாறக் கூடும். முதல் அணு எங்கிருந்தோ ஒரு மின்னணுவினைப் பெறுகின்றது. இது தன்னுடைய மின்னணுக்களில் ஒன்றினை இரண்டாவது அணுவிற்குத் தருகின்றது. இரண்டாவது அணு 29 மின்னணுக்களை வைத்துக்கொள்ள முடியாதாதலின் அது தன்னிடமுள்ளவற்றில் ஒன்றினை மூன்றாவது அணுவிற்குத் தருகின்றது. ஒரு தாமிரக் கம்பியில் கோடிக்கணக்கான அணுக்கள் உள்ளன. ஆகவே, ஓர் அணுவிலிருந்து பிறிதோர் அணுவிற்கு நகர்வதற்கு எண்ணற்ற மின்னணுக்கள் விடுதலையுடன் இயங்குகின்றன; அவை அருவிபோல் நகர்கின்றன. தாமிரக்கம்பியின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு மின்னணுக்களின் இயக்கம் இருந்து வருகின்றது. நம் இல்லத்தில் நஎரியும் மின்விளக்கிற்குச் செல்லும் கம்

இ.வா.—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/25&oldid=1394574" இலிருந்து மீள்விக்கப்பட்டது