உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இளைஞர் வானொலி


பியில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் வினாடியொன்றுக்கு 3,000,000,000,000,000,000 மின்னணுக்கள் சென்றுகொண்டிருக்கின்றன!

படம் 6. கம்பியில் செல்லும் மின்னோட்டத்தைக் காட்டுவது.

ஒரு தாமிரக்கம்பியில் மின்னணுக்கள் “ தாமாகவே ” பாய்ந்து செல்லுவதில்லை. ஒரு மின்னாக்கப் பொறியினாலோ (dynamo) அல்லது ஒரு மின்கல அடுக்கினைக் கொண்டோ கம்பியின் ஒரு பக்கத்தில் மின்னணுக்களின் “அழுத்தம்” ஏற்படுகின்றது. ஒரு மின்கலத்துடன் இணைக்கப் பெற்றுள்ள கம்பியில் எதிர் - மின்முனையில் மித மிஞ்சிய மின்னணுக்களும் நேர்- மின்முனையில் குறைவான மின்னணுக்களும் இருக்கின்றன. ஆகவே, எதிர் - மின்முனையிலிருந்து நேர்-மின் முனையை நோக்கி மின்னணுக்கள் நகர்கின்றன. இதனைத்தான் நாம் மின்னோட்டம் (electric -current) என்று வழங்குகின்றோம்.

மின்கலத்தினின்று, அல்லது மின்னாக்கப் பொறியினின்று மின்னணுக்கள் வெளிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/26&oldid=1394939" இலிருந்து மீள்விக்கப்பட்டது