இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. தொலைபேசி
இன்று நாம் தொலைவிலுள்ளவர்களிடம் உரையாடுகின்றோம், வீட்டிலிருந்து கொண்டே சாமான்களை ஆள்மூலம் அனுப்புமாறு வணிகர்கட்குச் செய்திகளை அனுப்புகின்றோம். பாங்கிகளில் ஓர் அறையிலிருக்கும் அலுவலர் பிறிதோர் அறையிலிருக்கும் அலுவலர் ஒருவருடன் உரை
படம் 7. அலுவலர் தொலைபேசியின் மூலம் பேசுகின்றார்.
யாடுகின்றார். கொள்ளேயிடுவோர் வீட்டினுள் புகுந்த செய்தியை உடனே ஊர்க்காவல் அலுவலகத்திற்கு அனுப்ப முடிகின்றது. தீவிபத்து நேரிடுங்கால் உடனே தீயணைக்கும் படையினை வருமாறு செய்கின்றோம். இச் செயல்கள் யாவும்