உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இளைஞர் வானொலி


கொண்டிருந்தபொழுது இக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. இதுவும் தற்செயலாக நிகழ்ந்த ஒர் அற்புதக் கண்டுபிடிப்பாகும்.

கி. பி. 1875 இல் வாட்சன் (Watson} என்ற தன்னுடைய துணைஅலுவலர் ஒருவருடன் பாஸ்டன் என்ற நகரில் ஒரு சிறிய தந்திப் பாதையில் வேலை செய்துகொண்டிருந்தார் பெல். வாட்சன் ஒரு பக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தபொழுது பெல் மறுபக்கத்தில் செய்திகளை ஏற்கும் இடத்தில் உள்ள விசைகளைப் (springs) பொருத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது செய்திகளையனுப்பும் விசையொன்று அதிர்வது நின்று போயிற்று. வாட்ஸன் அது திரும்பவும் வேலை செய்வதற்காக அதைப் பிடுங்கி (plucking) வைத்திருந்தார். அப்பொழுது பெல் திடீரென்று அந்த அறைக்கு வங்து “நீ என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று உரத்துக் கத்தினார். செய்தியை ஏற்கும் பக்கத்திலிருந்த பெல்லுக்குப் பிடுங்கின விசையின் ஒலி கேட்டது.

அங்கு நடந்தது இதுதான். அனுப்பும் கருவியின் விசையிலுள்ள ஆணிகள் உருகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. வாட்சன் ஆணியைப் பிடுங்கியதும் (snapped), மின்சுற்று உடைபடாமல் இருந்தது. காந்தம் ஏறின எஃகு விசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/30&oldid=1395055" இலிருந்து மீள்விக்கப்பட்டது