உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொலைபேசி

23


(spring) காந்தத்தின் துருவத்தில் அதிர்ந்ததால் அஃது ஒரு மின்னோட்டத்தை விளைவித்தது. விசையின் (spring) பக்கத்திலுள்ள காற்றின் திண்மை மாறிக்கொண்டிருந்ததால் இந்த மின்னோட்டமும் உறைப்பில் மாறிக்கொண்டிருந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சியின் முழுத்தாற்பரியமும் பெல்லுக்குப் புலனாயிற்று. விசைக்குப் பதிலாக ஒரு விதானத்தைப் (diaphragm) பொருத்தினார். இஃது ஒரு மனிதரின் குரலினால் ஏற்படும் காற்றின் அழுத்தத்திற் கேற்றவாறும், பாட்டிற் கேற்றவாறும் அதிர்ந்தது. பல்வேறு வடிவத்தில் விதானங்களைப் பொருத்திச் சோதனைகளைச் செய்தார் பெல். அதன் பிறகு ஒரு செய்தி அனுப்பும் கருவியையும் அதனை ஏற்கும் கருவியையும் அமைத்தார்.

இவர் கண்டறிந்த தொலைபேசியின் தத்துவம் இது: ஒலியலைகள் மின்னோட்டமாக மாற்றப் பெறுகின்றன; அந்த மின்னோட்டம் திரும்பவும் ஒலியலைகளாகின்றன. ஒலியலைகள் சாதாரணமாகக் காற்றில் வினாடி யொன்றுக்கு 1100 அடி வீதம்தான் செல்லும் என்பதை நாம் அறிவோம். ஆனால், மின்னோட்டத்தைக் கம்பிகளின் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள்—ஏன் ? ஆயிரக்கணக்கான மைல்கள்—அனுப்பலாம். இதிலிருந்து நாம் பெல்லின் தொலைபேசியின் முக்கியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/31&oldid=1395057" இலிருந்து மீள்விக்கப்பட்டது