பக்கம்:இளைஞர் வானொலி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. ஒலியின் தன்மைகள்

ம்மைச் சுற்றிலும் காற்றுச் சூழ்ந்துள்ளது. காற்றில் ஏற்படும் விரைவான குழப்பம் அல்லது சலனம் நம்முடைய காதில் உள்ள சவ்வினைத் தாக்கி அதில் ஒருவித அதிர்ச்சியை உண்டாக்குகின்றது. இந்த அதிர்ச்சியினை நாம் உணருகினறோம். இந்த உணர்ச்சியினையே நாம் ஒலி என்று பேசுகின்றோம். காற்று இருப்பதனால்தான் ஒலி உண்டாவது சாத்தியமாகின்றது. காற்று அல்லது காற்று மண்டலம் (atmosphere) பூமியின்மீது இல்லையெனில் நாம் ஒன்றையும் கேட்க முடியாது. ஒருவர் பேசும் பேச்சினையோ, ஒருவர் பாடும் இசையினையோ, அல்லது கடலலைகளின் இரைச்சலையோ நம்முடைய செவி உணரமுடியாது. காரணம், நம்முடைய காதுகளுக்கு அவற்றைச் சுமந்து கொண்டுவர இடையில் யாதொரு பொருளும் இல்லை. இவ்வாறு இடையில் ஒலியினைக் கொண்டுவரும் பொருளே ஊடகம் (medium) என்று வழங்குவர். ஒலியினைக் கொண்டு செல்வதற்குக் காற்று ஒர் ஊடகமாக உள்ளது.

காற்றில் உண்டாகும் குழப்பத்தை அதிர்வுகள் (vibrations) என்று வழங்குவர். நாணற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/33&oldid=1395275" இலிருந்து மீள்விக்கப்பட்டது