பக்கம்:இளைஞர் வானொலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இளைஞர் வானொலி



குச்சி ஒன்று இருக்கின்றது. அது. வேகமாக அசைந்து ஆடுகின்றது. அது என்ற இடத்திலிருந்து ஆடத்தொடங்கி என்னும் இடத்தை

படம் 10. நாணற்குச்சியின் அசைவினால் அலை உண்டாதல்.

அடைந்து அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் என்ற இடத்தையே அடைகின்றது எனக்கொள்வோம். இவ்வாறு செய்வதால் அஃது ஒருமுறை அதிர்கின்றது என்று கூறுகின்றோம். ஒருமுறை போய்வரும் ஆட்டத்தைத்தான் ஓர் அதிர்ச்சி அல்லது அதிர்வு (frequency) எனக் குறிப்பிடுகின்றோம்.

நாணற்குச்சி ஒருமுறை அதிரும்போது ஓர் அலையை அது காற்றில் பரப்புகின்றது. ஒவ்வோர் அதிர்ச்சியிலும் ஓர் அலை கிளம்பிப் பரவுகின்றது. இப்படிப் பரவும் அலைகள்தாம் நம் காதை வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/34&oldid=1395276" இலிருந்து மீள்விக்கப்பட்டது