உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

இளைஞர் வானொலி



அதிர்வுகளை உண்டாக்கி ஒலியை அனுப்பும் பொருளைத்தான் நாம் தொட்டு உணரலாம்.

கீழ்க் கண்ட இந்தப் பரிசோதனையை நாம் செய்து பார்க்கலாம்: நம்முடைய வீட்டிலுள்ள வானொலிப் பெட்டியை நன்றாகத் திருகிவிட்டு உரத்துப் பாடுமாறு செய்யலாம். மெல்லிய அட் டையாலான ஒரு பெட்டியை இருகைகளாலும்

படம் 11. பாடும் வானொலிப் பெட்டியின் அருகில் அட்டைப்
பெட்டியை வைத்துப் பார்த்தல்.

மெதுவாகப் பிடித்துக்கொண்டு வானொலிப்பெட்டியின் அருகே கொண்டுவருவோம். அட்டைப் பெட்டியின் பக்கங்கள் அதிர்ந்து நம்முடைய விரல்களைக் ‘கீச்சம் காட்டுவதை’ உணர்கின்றோம். அட்டைப் பெட்டி உரத்துப் பாடும் வானொலிப் பெட்டியின் அருகே இருக்கும்வரை அதில் நுண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/36&oldid=1395314" இலிருந்து மீள்விக்கப்பட்டது