பக்கம்:இளைஞர் வானொலி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒலியின் தன்மைகள்

29


ணிய துடிப்புக்கள் இருக்கும். அட்டைப் பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் உள்ள காற்று வானொலியின் அதிர்வுகளுக்கேற்றவாறு துலங்குவதாலும், ஒலிபெருக்கியினின்று புறப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான நுண்ணிய காற்றலைகள் அட்டைப் பெட்டியின் பக்கங்களைத் தாக்கி அதே முறையில் அதிரச் செய்வதாலும் இத் துடிப்புக்கள் உண்டாகின்றன. இப்பொழுது வானொலி பாடுவதை நிறுத்திவிட்டு அட்டைப் பெட்டியை மட்டிலும் அதிரச் செய்யக் கூடுமானால், அப்பெட்டி அந்த இசையினைத் தரக்கூடும். அது மிக மிக மெதுவாக (faint) இருக்கும்; ஆயினும், அஃது இசையேயாகும். அட்டைப் பெட்டி உறுதியான காகிதத்தினாலாகியிருந்து அது பலமாகவும் அதிரக் கூடுமாயின் அஃது இசையை இன்னும் சற்று உரத்துத் தரும்.

மேற்குறிப்பிட்ட இப்பரிசோதனையை எந்த விதமான ஒலியைக்கொண்டு செய்தாலும், பெட்டியின் பக்கங்கள் அதிர்வுகளை உண்டாக்கும். நாம் பெட்டியின் அருகே பேசினாலும் நாம் அதன் பக்கங்களில் துடிப்புக்கள் உண்டாவதை உணர்கின்றோம். நாம் பேசி நிறுத்திய பிறகு அந்தத் துடிப்புக்களைத் திரும்பவும் நிகழுமாறு செய்யக் கூடுமானல், நாம் உண்மையில் அந்தப் பெட்டி நம்முடைய குரலில் நாம் பேசிய பேச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/37&oldid=1395315" இலிருந்து மீள்விக்கப்பட்டது