இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பயிர்காக்கும் உழவனென உயிர்கள் காக்கும்
பான்மையிலே முதலமைச்சர் ; வறியர் தாமும்
மயல்போக்கும் கல்வியினால் மேன்மை பெற்று
வாழ்வுபெற வழியமைத்தோன் ; பார தத்தை
உயர்வாக்க உழைப்பதிலே முதன்மைத் தொண்டர்;
ஒருநலமும் தாம்நாடார் காம ராசர்
பெயர் வாழ்த்தி அவர் பிறந்த நன்னாள் வாழ்த்திப்
பெரிதுவந்து படைக்கின்றேன் இந்த நூலை.