பக்கம்:இளைஞர் வானொலி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இளைஞர் வானொலி



கம்பிச் சுருள்களில் மின்னோட்டம் செல்லும்பொழுது தேனிரும்புத் துண்டு காந்தமாகிவிடுகின்றது; கம்பிச் சுருள்களில் மின்னோட்டம் பாயாமல் நிறுத்தப்பட்ட அந்தக் கணமே இரும்புத்துண்டும் தன்னுடைய காந்தச் சக்தியை இழந்துவிடுகின்றது. இவ்வாறு கம்பிச் சுருள்கள் சுற்றப் பெற்ற தேனிரும்புத்துண்டையே காம் மின்காந்தம் (electro-magnet) என்று வழகுகிங்ன்றோம். இதனையே நாம் மேலே குறிப்பிட்டோம். இதுதான் நவீன நாகரிகத்திற்குக் காரணமான முக்கிய புதுப்புனைவு (invention) ஆகும் என்று பல அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.

படம் 18. மின்காந்தங்கள்-மின்னோட்டம் பாயாத நிலையிலும் மின்னோட்டம் பாயும் நிலையிலும்.

மேற்கூறிய தேனிரும்பைச் சுற்றியுள்ள கம்பிச் சுருள்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தேனிரும்பிலும் முன்னே தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/40&oldid=1395396" இலிருந்து மீள்விக்கப்பட்டது