உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வியத்தகு மின்காந்தம்

33


அளவினை விடக் காந்தச் சக்தி அதிக அளவில் தோன்றும். அங்ஙனமே, கம்பிச்சுருளில் பாய்ந்து வரும் மின்னோட்டத்தின் வன்மையை அதிகப்படுத்தினாலும் தேனிரும்பில் அதிகமான காந்தச் சக்திதோன்றும். இந்த இரண்டு முறைகளில் எந்த முறையைக் கையாண்டாலும், அல்லது இரண்டு முறைகளையும் ஒருங்கிணைத்துக் கையாண்டாலும் வரம்பின்றித்தேனிரும்பின் காந்தச் சக்தியை அதிகப்படுத்திக்கொண்டே போகமுடியாது. அஃது இரும்பின் நீளம், கனம் முதலியவற்றைப் பொறுத்தது. இந்த அளவுகளுக்கேற்றவாறு தேனிரும்பில் காந்தத்தை ஏற்றலாம்; அதற்கு மேல் ஏற்றவே முடியாது.

இன்னொரு செய்தியும் ஈண்டு அறிதற்பாலது. கம்பிச்சுருளில் பாய்ந்துவரும் மின்னோட்டம் ஒரே ஒழுங்காக ஓடாமல் மாறுபட்டு ஓடினால் அதன் மாற்றத்திற்குத் தகுந்தவாறு தேனிரும்பின் காந்தச் சக்தியும் மாறுபடும். மின்னோட்டத்தை முற்றிலும் நிறுத்தி விட்டால் தேனிரும்பில் பெரும்பாலும் காந்தச் சக்தியே இல்லாது போய் விடும்.

மின்காந்தம் மிகச்சரியான முறையில் இயங்கக்கூடியது. அது மிகவும் நுண்ணிய உணர்வுடையது. கம்பிச்சுருள்களிலுள்ள மின்னோட்

இ.வா.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/41&oldid=1395411" இலிருந்து மீள்விக்கப்பட்டது