பக்கம்:இளைஞர் வானொலி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. ஒலி பெருக்கி

சிலருடைய குரல் ‘கீச்’சென்று மென்மையாக இருக்கும். சிலருடைய குரல் வெண்கல ஒசை போல் ‘கணீர்’ என்று எடுப்பாகக் கேட்கும். அங்ஙனமே, சில பாடகரின் சாரீரம் மெல்லியதாகவும் சில பாடகரின் சாரீரம் வல்லியதாகவும் இருக்கும். வீணை, புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளின் ஒலி மெதுவாகக் கேட்கும்; மேளம், நாதசுரம் போன்ற இசைக் கருவிகளின் ஒலி உரத்துக் கேட்கும்.

பெரிய மாநாட்டுப் பந்தலில் பேச்சு மேடைக்கு மிகத் தொலைவில் உட்கார்ந்திருப்போர் மேடையில் பேசுவோரின் பேச்சினை நன்கு கேட்க முடியாது. அங்ஙனமே, ஒருவர் தம்முடைய பெரிய தொண்டையைக் கொண்டு நன்கு பாடினாலும் தொலைவிலுள்ளோர் அப்பாட்டினை நன்கு செவி மடுக்க முடியாது. இத்தகைய சமயங்களில் பேசுபவர்களின் குரலையும், பாடுபவர்களுடைய சாரீரத்தையும், இசைக் கருவிகளின் ஒலியையும் மாநாட்டுப் பந்தலிலுள்ள அனைவரும், மைதானத்திலும் வேறு வெளியிடங்களிலும் கூடியுள்ள மக்களும் நன்கு கேட்பதற்கு ஒலி பெருக்கி (loud-speaker) என்னும் கருவியை இக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/44&oldid=1395414" இலிருந்து மீள்விக்கப்பட்டது