உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இளைஞர் வானொலி


கப் பெற்றுள்ளகூட்டத்தில் ஆங்காங்கு நடப் பெற்றுள்ள மூங்கில் கம்புகளிலும் கட்டப்பெற்றிருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.

இக் காலத்தில் பலவகையான ஒலிபெருக்கிகளை இயற்றி அமைத்திருக்கின்றனர். இந்த அமைப்பு முறை கருவிகளின் வகைக்கு வகை மாறுபடுகின்றது; அவை செயற்படும் முறையிலும் வேறுபாடு உள்ளது. இவற்றின் உறுப்புக்களும் பலவகையாக உள்ளன. எனினும், எல்லா

படம் 15. ஒலிபெருக்கியின் அமைப்பினை விளக்குகின்றது.

வகைக் கருவிகளின் நோக்கம் ஒன்றே. அஃதாவது, ஓரிடத்தில் தோன்றும் ஒலியை-அஃது எவ்வளவு மெல்லிய ஒலியாயிருப்பினும்-தொலைவிலுள்ளவர்களும் தெளிவாகக் கேட்குமாறு செய்வதே இந்த வகைக் கருவிகளின் நோக்கமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/46&oldid=1395420" இலிருந்து மீள்விக்கப்பட்டது