பக்கம்:இளைஞர் வானொலி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இளைஞர் வானொலி


பின்பக்கத்திலுள்ள கார்பன் துணுக்குகள் நெகிழ்கின்றன; இப்பொழுது அவற்றில் அழுத்தமும் குறைகின்றது. இப்பொழுது மின்னோட்டமும் குறைகின்றது. எனவே, கம்பிகளில் ஒடும் மின்னோட்டத்தின் வன்மையும் மென்மையும் இந்தத் தகட்டின் அதிர்வுகளைப் பொறுத்துள்ளன. இத்தகைய அமைப்பினால்தான் தொலைபேசியும் வானொலியின் ஒலிவாங்கியும் செயற்படுகின்றன. தொலைபேசியின் பேசும் பக்கத்திலுள்ள பகுதியைப் பிரித்துப் பார்த்தால் இது புலனாகும். ஆகவே, ஒலி வாங்கியிலுள்ள தகட்டினை அதிரச் செய்யும் ஒலிகள் கம்பிகளின் வழியாகச் செல்லும் மின்னோட்டத்தில் நூற்றுக் கணக்கான வெவ்வேறு விதமான நுண்ணிய மின்சார மாற்றங்களை உண்டாக்குகின்றன என்பதை நாம் அறிகின்றோம். இந்த மாற்றங்களை ஏற்ற இறக்கங்கள் (fluctuations) என்று வழங்குவர். இந்த ஏற்ற இறக்கங்களைக் கேட்கும் இடத்தில் வைக்கப்பெற்றுள்ள ஒலிபெருக்கியின் மின்காந்தத்தை அடையச் செய்தால், அவை அந்தக் காந்தத்தின் முன்புறமுள்ள மெல்லிய இரும்புத் தகட்டினை அதிரச் செய்கின்றன. அஃது ஒலிவாங்கியினுள் தகடுகள் அதிர்வதைப்போலவே மிகச் சரியாக அவற்றுடன் சேர்ந்து ஆடுகின்றது. இப்பொழுது பேசும் பொழுது என்ன ஒலிகள் உண்டாகி ஒலிவாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/52&oldid=1396153" இலிருந்து மீள்விக்கப்பட்டது