பக்கம்:இளைஞர் வானொலி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒலி வாங்கி

45


யின் தகடுகளை அதிரச்செய்தனவோ, அதேமாதிரியான ஒலிகளைத்தான் ஒலிபெருக்கியின் இரும்புத் தகடும் உண்டாக்குகின்றன. இதனால் பேசுவோரின் பேச்சு அப்படியே ஒலிபெருக்கியிலும் கேட்கின்றது. ஆகவே, பேச்சாளரின் சொற் பொழிவும் பாடகரின் பாட்டும் மிகத்தொலைவில் உட்கார்ந்திருப்போரின் காதுகளில் நன்கு விழுகின்றன. இதுவே ஒரிடத்தில் பேசும் ஒளி பிறிதோரிடத்தில் கேட்பதன் தத்துவம் ஆகும். மேற் கூறிய முறையில்தான் கம்பிகளின்மூலம் மின்சார முறையில் ஒலிகள் அனுப்பப்பெறுகின்றன. ஆனால், கம்பிகளின்றி எவ்வாறு ஒலி மிகத் தொலைவிடங்கட்கு அனுப்பப் பெறுகின்றது இதனை அடுத்துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/53&oldid=1396154" இலிருந்து மீள்விக்கப்பட்டது