பக்கம்:இளைஞர் வானொலி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்முகம்

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

—அவ்வையார்.


‘சென்றிடு வீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’

என்று தமிழன்னை தன் மைந்தர்களை நோக்கி வேண்டுவதாக அமைத்துத் தமிழ் மக்களை அறை கூவி அழைக்கின்றார் புதுமைக் கவி பாரதியார். இதற்கு வேண்டிய அறிவியற் கலையறிவு இளமையிலிருந்தே அமைய வேண்டும்; அதற்குரிய ஆர்வமும் சிறு வயதிலிருந்தே கிளர்ந்தெழ வேண்டும். அந்த முறையில் சிறுவர்களை ஊக்குவிக்க இந்த வரிசை நூல்கள் துணை செய்யும்.

தமிழில் அறிவியற்கலைகளை எழுதவும் விளக்கவும் முடியும் என்பதைச் சிலர் இன்னும் ஒப்புக் கொள்வதில்லை. எந்த மொழியும் அதன் வாயிலாகக் கருத்துக்களை விளக்க முயன்றாலன்றிக் கலைச்சொற்களும் தொடர்மொழிகளும் அதன்கண் அமைவதில்லை. பொருள்களை விளக்க முயன்றால் அவை தாமாகவே அமைந்து பொங்கிப் பொலிவுறும். ‘சொல்லுங் திறமையும் {Expressive ability) தமிழ்மொழிக்கு அமையும்.

இந்நூலை வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தினருக்கு—சிறப்பாக அதனைத் தொடங்கிய நாள் தொட்டு மிக்க ஈடுபாட்டுடன் கண்காணித்துவரும் அதன் துணை வேந்தர் திரு. எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்கட்கு—என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/6&oldid=1394165" இலிருந்து மீள்விக்கப்பட்டது